2002 ஒக்ரோபர் 24, வியாழக்கிழமை. எங்கள் மணவாழ்க்கையின் 6ஆம் மாத நிறைவினை ஒட்டி வேலைக்கு விடுமுறை எடுத்து கண்டிக்கு நதீஷாவின வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்றைய இரவு,
“இஞ்சேருங்கப்பா! நான் ஒண்டு சொல்லுவன் நீங்க கோபிக்கக்கூடாது”
“என்னெண்டு சொல்லுமன்”
“இல்லை நாங்க நாளைக்கு ஒருக்கா டொக்ரரிடை்டைப் போவமே?”
“நீர் திருந்த மாட்டீர்”
“இல்லையப்பா டொக்டரிட்டைப் போய் என்ன பிரச்சினையா என்னெண்டு தெரிஞ்சுதெண்டா நிம்மதியா இருக்கலாம் தானே. இப்ப IVF எல்லாம் இஞ்சையும் வந்திற்றுதாம் எண்டு கேள்விப்பட்டன்”
“என்ன சொன்னாலும் நீர் கேட்கப்போறேல்ல. சரி உம்மட விருப்பம்.”
“உண்மையாவா? அப்ப நாளைக்கு நான் appointment-ஐக் confirm பண்ணவா?”
“ஓ appointment எல்லாம் எடுத்திற்றீரா? இது எப்ப நடந்தது?”
“நான் என்ரை friend ஒருத்தியிட்ட அங்கையிருந்தே phone பண்ணி arrange பண்ணின்னான்”.
“ம்ம்ம். நீர் இவ்வளவு அவசரப்படுற படியா நாளைக்குப் போவம். ஆனா பாரும் டொக்ரர் ஒரு பிரச்சனையும் இல்லையெண்டுதான் சொல்லுவேர்.”
மறுநாள் மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா சோதனைகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொண்டோம். ஞாயிற்றுக்கிழமை வந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ளச் சொன்னதால் ஞாயிறு காலை அவரிடம் சென்றிருந்தோம்.
“Nothing to worry. Both of you are OK."
“Then why doctor? It's already 6 months, but I didn't conceive yet.”
“It may be due to stress. Are both of you happy in your married life?"
“Yes! of course”
“I think either both or one of you are under stress during your intercourse. For some people it happens. Any way as both of you are young enough you can wait for another 6 months. I can advice you to take a 1 week trip to go some nice places as honeymoon to enjoy the life without any stress”
வீட்டினை அடைந்தோம். நதீஷா இப்போது சந்தோஷமாக இருந்தாள்.
“சொன்னன் தானே எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையெண்டு”
“எனக்கு ஒரு உண்மை சொல்லுவீங்களா?”
“என்ன?”
“உங்களுக்கு இந்த life, stress ஆவா இருக்கு?”
“என்ன நீங்க? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்”
“அப்ப டொக்ரர் சொன்னேர்.”
“அவர் என்னையா சொன்னவர்? நான் நினைச்சன் உங்களுக்குத்தான் stress என்று”
“நீங்க என்ன லூசா? எனக்கென்ன stress? நான் எவ்வளவு சந்தோஷமா உங்களோட இருக்கிறன். இது என்ரை dream life”
“சரி அப்ப விட்டிட்டு relax இருங்கோ. சும்மா கவலைப்பட்டுக் கொண்டிருக்காம ஏதாவது வேலைக்கு apply பண்ணுங்கோ”
2002 நவம்பர் இறுதி வாரம். சமாதானம் வந்ததன் பின்னான முதலாவது மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டிருந்தது. 26 ஆம் திகதி இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க மாவீரர் துயிலும் இல்லத்திற்கு என்னையும் அழைத்துக் கொண்டு விரைந்தாள் நதீஷா.
துயிலுமில்லம் முழுவதும் கனத்த இதயங்களுடன் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள்
உறவினர் வந்துள்ளோம்.
உறவினர் வந்துள்ளோம்.
அக்காவைப் போன்றவர்களுக்கான பொதுவிடத்தில் அஞ்சலி செலுத்த நின்றவர்களுடன் இணைந்து கொண்டோம். நெஞ்சு பனிக்க கண்ணீர் உகுக்க உருகி நின்றோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
வீட்டினை அடைகையில் அக்காவின் நினைவுகள் அலைமோதின. இதோ அக்காவிற்காக என்னுடன் வந்து இவளும் அஞ்சலி செலுத்தியிருக்கிறாள். ஆனால் அவளது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இவள் தந்தையைப் பற்றி என்றைக்கேனும் நான் சிந்தித்துப் பார்த்திருக்கின்றேனா? சிறிலங்காவின் காவல் துறையில் இருந்தாலும் அவர் யாரேனும் தமிழர்களைக் கொன்றதாகவோ கொடுமைப் படுத்தியதாகவோ இல்லையே. படையிலிருந்த அவளது அண்ணனைப் போல் அவரைக் கருத முடியாதே. இன்றைய தினத்தில் அவருக்கும் அஞ்சலி செய்வதுதான் முறையாக இருக்கும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒன்றும் தப்பல்ல. அதுதான் மனிதத்தன்மை. அவலச்சாவில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையாமல் அலைந்து கொண்டேயிருக்குமாம். அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து அவை சாந்தியடைவதற்குரிய செயல்களைச் செய்யவேண்டியது உயிருள்ள மனிதர்களின் கடமை. தன் தந்தையைக் கொன்றவளுக்கே வந்து அஞ்சலி செலுத்தும் நதீஷா எங்கே? நான் எங்கே?
வீட்டினை அடைந்து முதலில் நான் குளித்துவிட்டு வர நதீஷா குளிக்கச் சென்றாள். அவள் வந்ததும் .அவள் கண்களை மூடி அவளை சாமியறைக்கு அழைத்துச் சென்று கண்களை விடுவித்தேன். அதிர்ச்சியடைந்தவள் கண்களினின்றும் கண்ணீர் பெருக்கெடுக்க,
“மகே தாத்தே...” கேவினாள்.
அவளை ஆதுரத்துடன் தாங்கிக்கொண்டேன். என்னில் சாய்ந்து கொண்டாள். அக்காவினதும் அவள் தந்தையினதும் படங்கள் அருகருகே வைக்கப்பட்டு விளக்கேற்ப்பட்டிருக்க இருவரும் இணைந்து அவர்கள் இருவருக்குமாய் எங்களின் அஞ்சலியைத் செலுத்தி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தோம்.
“Thanks-ங்க thank you so much-ங்க. இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”
“ஓ!” புன்னகைத்துக் கொண்டேன்.
“என்னடா சும்மா ஓ எண்டு மட்டும் சொல்லிப்போட்டு நிக்கிற?”
“ஆ! என்ன எடா புடா எண்டு வாய் நீளுது?”
“அதுக்கு இப்ப என்னடா செய்யப் போற?”
“எனக்கும் நீளும்”
“ஓ..ஓ!”
“இல்லை. நான் உண்மையாக் கையைத்தான் சொன்னான்”
“ஆ! ச்சீ! போடா கள்ளா. உன்னை”
அவள் என்றுமில்லாதவாறு மிகுந்த சந்தோஷத்துடனும் கிளர்ச்சியுடனும் இருப்பது புரிந்தது.
அல்லி மலர்வது இரவு நேரத்தில
மல்லி மலர்வது மாலை நேரத்தில
பெண்மை மலர்வது எந்த நேரத்தில
என்று கணடு பிடிச்சு...
மல்லி மலர்வது மாலை நேரத்தில
பெண்மை மலர்வது எந்த நேரத்தில
என்று கணடு பிடிச்சு...
“என்ன உன்னை எண்டிட்டு நிப்பாட்டீற்றீர்?”
“ஏன் ஐயாக்கு கட்டாயம் மிச்சத்தையும் சொல்ல வேணுமாமோ?
”ஓம்”
“சொல்லாட்டி என்ன செய்வேராம்”
“அடிப்பேராம்.”
“ஏலுமெண்டா அடிக்கட்டும் பார்ப்பம்”
எட்ட, அவள் விலக சறுக்கி இருவருமாய்க் கட்டிலில் விழுந்தோம். கைபற்றினேன். சிலிர்த்தாள் சிணுங்கினாள். அன்றைய தீண்டலில் புதிதாய்த் தெரிந்தாள். அனைத்துமே புதிதாய் நீண்டு சென்ற இரவில் உறவும் நீள பரவசமாய் பரமசுகம். தந்ராவின் நாற்புள்ளி, முப்புள்ளி நிலைகள் தாண்டி சக்கர நிலையை அடைந்ததாய்... பரமானந்த நிலை தொடர... அந்த அற்புத தருணங்களில் அக்காவும் நதீஷாவின் அப்பாவும் மாறிமாறி வந்து போக, ஓஷோவின் காமத்தினூடாக கடவுளைக் காணுதல் இதுதானோ?
ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..
பனியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு...
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..
பனியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு...
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்டாண்டுகாலமாய்த் தொடர்ந்துவரும் துவந்த யுத்தம் முடிவடைய பெருக்கெடுத்திருந்த வியர்வை வெள்ளமாய் ஓட, சட்டென நினைவு வந்தவனாய் மூச்சுக்காற்றினை உற்றுப் பார்த்தேன். அது 'ஈதா'-வும் 'பிங்காளா'-வுமாயும் .இல்லாமல் இடது மூச்சும் வலதும் மூச்சும் சமமாய் இருக்க நெஞ்சுக்குள் திக்கென்றது.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53
2 வருடங்கள் ஒழுங்காகச் செய்தும் பிள்ளை இல்லாவிட்டால்தான் IVF எல்லாம், - இளம் தம்பதிகளுக்கு.
ReplyDeleteமுடிவு கொஞ்சம் பதைபதைப்பாக உள்ளது.
வெகு நாட்களுக்குப் பின் ஒரு நல்ல இயல்பான
ReplyDeleteமனதை சுகமாக வருடிச் செல்லும் பதிவினைப் படித்த சுகம்
எப்படி இந்தப் பதிவு இத்தனை நாள் என் கண்ணில் படாது போயிற்று ?
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்