Thursday, November 8, 2012

ஒரு பயணமும் சோஷலிஸமும்


யாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்கைத் தாண்டிவிட்டிருந்தது. 

“ச்சே! கொஞ்சம் முந்திவந்திருந்தா நாலு மணி bus இனைப் பிடிச்சிருக்கலாம்” என்றவனிடம் திரும்பினேன்.

“don't worry மச்சான். எங்களுக்குத் தாராளமா நேரமிருக்கு. கொழும்பு trIain பத்து மணிக்குத்தான்.”

“இல்லையடாப்பா.. நேரத்துக்குப் போனா வவுனியாவில வடிவாச் சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்.....” இழுத்தான்.

“மச்சான் இனிச் சோஷலிசத்துக்குள்ள தேவையான சாப்பாடு எண்டும் கொண்டுவரவேணுமடாப்பா”

“அம்மாணா சும்மா விசரக் கிளப்பாத. எப்பப்பாரு எதுக்கெடுத்தாலும் சோஷலிஸமும் கத்தரிக்காயும் எண்டு. வடிவா AC bus-இல கொழும்பு போக இருந்த என்னை சுரண்டல் அது இதெண்டு மண்டையைக் கழுவி வவுனியா bus இல ஏத்திப் போட்டு....”

“இல்லை மச்சான். உனக்கு இன்னும் சோஷலிஸத்தைப்பற்றி வடிவா விளங்கேல்லை. திருப்பிச் சொல்லுறன் வடிவாக் கேள்”

“திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம். இதைத்தானே சொல்லப்போற. கேட்டுக்கேட்டுக் காது புளிச்சுப் போச்சடாப்பா. கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

“இல்ல மச்சான் நீ ஒருக்காக் கேளன்”

“அம்மாண நான் பிறகு நான் பொல்லாதவனாகிடுவன். பிறகு நீ சந்தானம் கருணாஸ் மாதிரி ஆயிருவ”

காதுக்குள் “மச்சான் நீ கேளேன் மச்சான் நீ கேளேன்” என்று கருணாஸ் கெஞ்சுவது கேட்கவே அமைதியானாலும் அதே feelings எனக்குள்ளும். எப்படி இப்படி மாறினேன்? இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் கார்ல் மார்க்ஸ்ஸின் கொம்மியூனிஸக் கோட்பாடுகளும் அதன் அடுத்த கட்டமான சோஷலிஸமுமே மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த வியாபார நிறுவனங்களைப் பார்த்தாலும் அது தேசிய முதலாளித்துவத்தைச் சார்ந்ததா அல்லது தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்ததா? எப்படியெல்லாம் அவைகள் சாதாரண மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பவற்றை யோசித்து மூளையைக் குழப்புவதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகி என்றைக்கு அது பாட்டாளி மக்களின் புரட்சியுடன் முடிவுக்கு வரும் இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமா?

“சகோதரர்களே எனக்கு இரண்டு கையும் இல்லை. உங்களிடம் உதவிகேட்டு வந்திருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்”

கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். யாசகன் ஒருவன் பேரூந்தினுள் ஏறி சாரதியின் இருக்கைக்கு அண்மையில் நின்றுகொண்டு பயணிகளை நோக்கிக் கூறிக்கொண்டிருந்தான். ஏற்கனவே ஒருகால் அகற்றப்பட்ட முதியவர் ஒருவரும் அவரைத் தொடர்ந்து வயதான பெண்மணியுடன் ஒரு சிறுவனும் பேரூந்தினுள் ஏறி யாசித்து விட்டுச் சென்றிருந்தனர். இப்போது பேரூந்து ஓரளவிற்குப் பயணிகளால் நிறைந்திருந்தது. என் முன்னாலிருந்தவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இங்கே ஒரு கூட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் வவுனியாவிற்குத் திரும்பிவதற்காக வந்திரக்கிறார்கள் என்பது அவர்களின் உரையாடல்களிலிருந்து புரிந்தது. தான் மிகவும் கஷ்ரப்பட்டுத் தகவல்கள் சேகரித்துச் செய்த presentation ஒன்றினை வேறொருவர் தான் செய்ததாகக் கூறிப் பெயர் பெற்றுக்கொண்டதை உள்ளக்குமுறலுடன் அவர் தனக்கருகிலிருந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். இப்போது அந்த யாசகன் பயணிகளிடம் யாசிப்பதற்காக வந்துகொண்டிருந்தான். பலர் அந்த யாசகனைப் பார்த்துவிட்டு உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருக்க, தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டிருந்தவரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவரும் முன்னைய யாசகர்களுக்குச் செய்தது போலவே இந்த யாசகனையும் கணக்கிலெடுக்காமல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்த யாசகன் ஆடாது அசையாது அவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களோ அவனைச் சட்டைசெய்யாது தங்கள் உரையாடலில் தீவிரமாயிருப்பதாய்க் காட்டி்க கொண்டிருந்தனர்.

“Execuse me. I'm an unable man. Can you please help me?”

தமிழில் உரையாடிக் கொண்டிருந்த அந்தப் பயணிகள் தங்கள் பாசாங்கில் தீவிரமாயிருந்தனர்.

“மட்ட அத்த தெக்கக் ந. மட்ட பொடி உதவுகரண்ட புழுவன்த?”

அந்தப் பயணிகளிடம் எந்தச் சலனமுமில்லை.

“மூண்டு மொழியிலையும் கேட்டுப் பாத்திற்றன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். தெலுங்கு தெரியும். ஹிந்தி தெரியும்”

அந்தப் பயணிகள் இப்போது அமைதியாகி விட்டிருந்தனர்.

“மச்சான் ஆளைப்பார்.இவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியாத் தெரியுது?”

“ஓமடா நானும் அப்பவே யோசிச்சனான். நல்ல கட்ஸ்ஸான ஆளா smartஆ இருக்கிறான். அவனைப் பார்த்தா பிச்சை எடுக்க வந்ததாத் தெரியேல்லை. இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்குமெண்டால் ஆரு இவனுக்குப் பிச்சை போடுவினம்?”

உணமைதானே! நாமெல்லாம் எம்மிடம் இரந்து வாழ்பவர்களுக்கு சூடு சுரணை மானம் எண்டு ஒண்டும் இருக்கக்கூடாது எண்டுதானே எதிர்பார்க்கிறம். அப்ப எங்கட முதலாளிமாரும் அப்பிடித்தானே எங்களிடம் எதிர்பார்ப்பார்கள். ஏதோ புரிபடுவது மாதிரி இருந்தது. இதை வச்சே இண்டைக்கு இவனுக்குக் கொம்மியூனிசத்தைப் பற்றி ஒரு குப்பி எடுத்து விடலாம். மனதுக்குள் நான் கார்ல் மார்க்ஸாக மாறிக்கொண்டிருப்பதாய் ஒரு புழுகம். அருச்சுனனுக்கு கண்ணன் தேர் சாரதியா வந்து பகவத்கீதை அருளிய மாதிரி எனக்கும் வாகன சாரதிக்கு பக்கத்து இருக்கையில் அமர இடம் கிடைத்த ஒரு பயணத்தில் அந்த சாரதியிடம் கற்றுக் கொண்ட மார்க்ஸிஸ சித்தாந்தம் இடதுசாரிக் கொள்கைகள், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதைப்பற்றித் தம்பட்டமடிக்கும் குறைகுட மனித இயல்பிற்கு நான்மட்டும் என்ன விதிவிலக்கா?

“மச்சான் இவனை வச்சே இப்ப உனக்கு கொம்மியூனிசத்தை விளங்கப்படுத்திறன் பார்”

“நீ ஒண்டும் புடுங்க வேண்டாம். அவனப் பார்த்தா றோக்காரன் மாதிரிக்கிடக்கு”

“ஓமடா நானும் அப்பிடித்தான் நினைச்சனான். அவற்றை செடிலும் திமிரும். தெலுங்கு ஹிந்தியெல்லாம் தெரியுதெண்டுறான்.”

“சரி அப்ப சத்தம் போடாம அமத்திக்கொண்டிரு“

மணி 4.30 ஆக சாரதி பேரூந்தில் வந்து ஏறி அதை start பண்ணிவிட்டு பின் 4.45 இற்கு பயணத்தை ஆரம்பித்தார். பேருந்து மின்சார நிலையவீதிக்கு வந்து வைரவர் கோயில் வீதியால் திரும்பி ஆஸ்பத்திரி வீதியில் ஏறிப்பின் ஆறாம் குறுக்குத் தெருவால் திரும்பி பிரதானவீதியை அடைந்து கண்டி A9 வீதியில் ஏறுகையில் நடத்துனர் பயணிகளிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்.

“அண்ணை வவுனிய எவ்வளவு?”

“நுாற்றியெண்பது”

ஆயிரம் ரூபாய்த்தாளை நீட்டினேன். வாங்கிவிட்டு சிட்டையைத் தந்தார்.

“மிச்சக் காசு?”

“ரிக்கற்றுக்குப் பின்னால எழுதியிருக்குப் பிறகு தாறன்”

 Ticket இனைப் பார்த்தேன். 177/= என்று போடப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் 820/= எழுதப்பட்டிருந்தது.

“பாத்தி்யா மச்சான் எங்களிட்ட எப்பிடிச் சுரண்டுறாங்களெண்டு? உண்மையா 177 ரூபா ஆனா வேண்டுறது 180 ரூபா. ஒரு trip இல எப்பிடியும் 55 பேரெண் பார்த்தாலும் சும்மா சுளையா 165 ரூபா சுட்டிடுறாஙகள். இவங்களைச் சும்மா விடக்கூடாது”

“கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

எல்லோரிடமும் பணம் வசூலித்துவிட்டு வந்த நடத்துனரிடம் ரிக்கற்றைக் கொடுத்தேன.

“என்ன?”

“மிச்சக்காசு தரவேணும்”

“மிச்சக்காசு ஓமந்தைக்கு அங்காலதான் தரலாம். இடையில ஏறின ஆக்களெல்லாம் ரிக்கற் எடுங்கோ”

என்னை அலட்சியப்படுத்திவிட்டு நடத்துநர் முன்னுக்கு விரைந்தான்.

ஆத்திரமாய் வந்தது. நடத்துநரிடம் தாராளமான சில்லறைகளும் சின்னத்தாள்களும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. திரும்பி வரட்டும் மனதுக்குள் கறுவிக் கொண்டேன்.

பேரூந்து சாவகச்சேரி பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஆறைத் தாண்டி விட்டிருந்தது. இடையிலே வீதி திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பயணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. இப்போது பேரூந்திற்குள் இடம்கொள்ளமுடியாத அளவில் பயணிகள் நிறைந்துவிட்டிருந்தார்கள். 

பேரூந்தும் முக்கிமுனகிக் கொண்டு புறப்பட்டது.

“என்னடா இவங்கள் short service bus மாதிரி எல்லா இடத்திலையும் நிண்டு ஆக்களை ஏத்திக்கொண்டு போறாங்கள். நெரிஞ்சு கொண்டு. எல்லாம் உன்னாலதான் வந்தது. நான் என்பாட்டுக்கு சிவனேயெண்டு நிம்மதியா AC bus இல சாய்ஞ்சு படுத்துக் கொண்டு போயிருப்பன்.”

“இல்லை மச்சான். இவங்கள் எங்களை மட்டுமில்லை. short service bus காரரையும் சுரண்டுறாங்களடாப்பா. இந்தச்சனமெல்லாம் உண்மையா கொடிகாமம் இல்லாட்டி கிளிநொச்சி bus இலதான் போகவேணும். அவங்கட உழைப்பிலையும் இவங்கள் மண்ணள்ளிப் போடுறாங்கள்.”

பேரூந்து இப்போது பளையை அடைந்து விட்டிருக்க சிலர் இறங்க, பல இளைஞர்கள் ஒன்றாக ஏறினார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளிலிருந்து அவர்கள் ஒன்றாக எங்கோ ஏதோ ஒரு நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் உரையாடலிலிருந்து அவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களல்ல என்பது புரிந்தது. அவர்களால் இப்போது பேரூந்து கலகலப்பாகி விட்டிருந்தது. கண்கள் சுழற்றியது. விழித்துப் பார்க்கையில் ஆனையிறவைத் தாண்டிவிட்டிருப்பது புரிந்தது. சன நெருசலில் எனக்கருகில் நின்றவனைப் பார்த்தேன். அதே கூட்டத்தைச் சேர்ந்தாலும் அவன் அமைதியாக வேறெங்கோ பார்த்தவண்ணமிருந்தான். தோள்மூட்டருகில் ஏதோ அழுத்துவதாய் வித்தியாசமாய் உணர்ந்தேன். திரும்பினேன். ஆத்திரமாய் வந்தது. தோளை முன்னுக்குக் கொண்டுவந்து நிமிர்ந்து அருகில் நின்றவனை முறைத்தேன். விபரீதத்தை உணர்ந்தவன் சடாரென மறுபுறமாய்த் திரும்பி நின்று கொண்டான். அவனையே தொடர்ந்து பார்க்க அதைப் புரிந்துகொண்ட அவன் சன நெரிசலுக்குள் புகுந்து என் பார்வையினின்றும் மறைந்து கொண்டான். ச்சே! எப்படித்தான் பெண்கள் இந்த பேரூந்துகளில் பயணம் செய்ய முடிகிறதோ?

கிளிநொச்சியை அடைந்ததும் பலர் இறங்கிக்கொண்டனராயினும் ஏறிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகமாயிருந்தது. இப்போது நடத்துநர் அந்த இளைஞர்களையும் முன்னால் நின்ற எல்லோரையும் மிகமிக நெருக்கமாக பனங்கிழங்கு அடுக்குவதுபோல் அடுக்கிக் கொண்டிருந்தான். அருகில் வந்ததும் ரிக்கற்றினை அவனிடம் கொடுத்தேன்.

“மிச்சக்காசு?”

“மிச்சக்காசெல்லாம் ஓமந்தை தாண்டினாப் பிறகுதான் தரலாம்”

“இல்லை எனக்கு அதுக்கு முதல் வேணும்?”

“அதுக்குமுதல் என்னத்துக்குத் தேவை?”

“என்ரை காசைத்தான் நான் கேக்கிறன்”

“தரமாட்டனெண்டா சொன்னான்? இப்ப தந்தா எல்லாரும் கேப்பினம். அதெல்லாம் இப்ப கரைச்சல்”

“bus நிப்பாட்டேக்க சாப்பிடுறதுக்கு என்னெட்ட வேற காசில்லை”

“இந்த bus ஒரிடத்திலையும் சாப்பாட்டுக்கு நிக்காது”

“ஓமந்தை check point இல நிக்கும் தானே”

புறுபுறுத்தவாறே ரிக்கற்றினை வாங்கினான். 800 ரூபாயை நீட்டினான். 

இவற்றை சுரண்டலுக்கு விடுறதில்லை.

”மிச்சம் 20 ரூபா?”

“அந்த ரிக்கற்றைத் தாங்க”

வாங்கி அதில் 20/= என்று எழுதித்தற்துவிட்டு 

“ஓமந்தைக்கு அங்கால வாங்குங்க”

“மச்சான் ஏன்ரா சும்மா சண்டைபிடிச்சுக்கொண்டு? சனமெல்லாம் எங்களையே பாக்குது பார்”

“இது! இதுதான் மச்சான் பிழை. இதில என்னத்துக்கு வெக்கப்படவேணும். படிச்ச மனிசர் நாங்களே இப்பிடி வெக்கப்பட்டா எல்லாரும் எல்லாத்தையும் சுரண்டிக்கொண்டு போயிருவாங்கள். கோவணமுமில்லாமப் பிறகு வெறுங்குண்டியோடதான் நிக்கவேண்டிவரும்”

“நீ முந்தி நல்லாத்தானே இருந்தனீ. பிறகென்னெண்டு உனக்கு இப்பிடி வந்தது?”

“நான் சீரியசாக் கதைக்கிறன். நீ பகிடிவிட்டுக்கொண்டு இருக்கிறாய். இப்பிடி விட்டுவிட்டுத்தான் இண்டைக்க இந்த நிலையில இருக்கிறம். உண்மையா மச்சான் இண்டைக்கு எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினையிருக்கு. எங்களுக்கு மட்டுமில்ல உலகத்திலை எத்தனையோ விதமா மக்கள் கஷ்ரப்படுகிறாங்கள். அதுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம் தான். எப்ப எல்லா நாடும் சோஷலிஸத்துக்குப் போகுதோ அப்ப ஒரு நாட்டிலையும் ஒரு பிரச்சனையும் இருக்காது”

“சும்மா விசர்க்கதை கதைக்கிறாய். சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாதா?”

அடடா! இவனுக்கும் கொஞ்சம் விசயம் தெரியும் போல. இனி ஆளோட கொஞ்சம் கவனமாத்தான் கதைக்க வேணும். அதுசரி சோவியத்யூனியன் ஏன் உடைஞ்சுது? ஒருநாள் குப்பியில கொம்மியூனிஸமும் சோஷலிஸமும் தரோவா விளங்கீற்றுது எண்டு நினைச்சது பிழையோ?

“இல்லை மச்சான். நான் என்ன சொல்ல வாறனெண்டா?”

“இஞ்சைவா! சோஷலிசத்தைப்பற்றிக் கனக்கக்கதைக்கிறாயல்லா? நீதானே சொன்னீ சோஷலிஸத்தில தேவைக்கேற்ற ஊதியம் எண்டு. அப்ப அங்க பார் அந்த ஐயாவ. அவர் இந்தச் சனத்துக்குள்ள எவ்வளவுக்கு நெரிபடுகிறேர் எண்டு. உன்னிலும் விட அவருக்குத்தான் இந்த சீற் தேவை. அப்ப நீ எழும்பி அவருக்கு இந்த இடத்தை விட்டுக்குடுக்கலாம் தானே”

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. முதலுக்கே மோசம் வந்திரும் போல இருக்கு.

“அப்பிடியில்ல மச்சான். எடுத்த உடனே சோஷலிஸத்தைக் கொண்டு வந்திரேலாது. அதுக்கு முதலில கொம்மியூனிசம் வரவேணும். அது என்ன சொல்லுதெண்டா திறமைக்கேற்ற வேலை. வேலைக்கேற்ற ஊதியம். So, அப்பிடிப் பாக்கேக்குள்ளை...”

“சும்மா சடையாத”

“இல்லையடா முதலில உனக்கு மார்க்ஸிஸம் தெரிய வேணும். அது என்ன சொல்லுதெண்டா....”

“ஒண்டும் சொல்ல வேண்டாம். நீ சும்மாயிரு”

அப்பாடா ஒரு மாதிரி இவனுக்குத் தெரியாத விசயங்களை இழுத்துவிட்டு, ஆள அமத்தியாச்சு. இல்லையெண்டா?

“மாத்தயா! பொட்டக் அற பத்த யண்டப் புழுவன்த?”

“இந்தாப்பாரன். தமிழ் ஆக்களுக்கு எவ்வளவு பேச்சுப் பேசி நெருக்கி நிக்க வைச்சிருக்கிறான் இந்தக் கொண்டக்ரர். ஆனா சிங்கள ஆக்களோடை எவ்வளவு பவ்வியமாய்க் கதைக்கிறான். அப்ப தமிழெண்டா தமிழனுக்கே இழப்பமா?”

“இப்பிடி வீரம் கதைக்கப் போய்த்தான் இண்டைக்கு இந்த நிலையில நிக்கிறம்”

“இல்லை மச்சான்.நாங்க அடக்குமுறைக்கு எதிரா எல்லா இனத்தையும் சேர்த்துப் போராடுறதை விட்டிட்டு தனிநாடெண்டு போராடினதுதான் பிழை. எங்களுக்குள்ளயும் எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தது. எல்லாரும் மனிசர்தானே. பிறகேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டமெண்டு..”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாய்? ஆருக்கு என்ன சட்டம் இருந்தது?”

“இல்லை மச்சான் சாதி அது இதெண்டு எத்தினை இருந்தது. குறைஞ்ச சாதி ஆக்களை கும்பிடுறதுக்கு கோயிலுக்குக்கூடப் போக விடாம..”

“இப்ப சாதிப்பிரச்சினை இருக்கா? ஆராவது கோயிலுக்குள்ளை போகேலாம இருக்கினமா?”

“ஆனா கல்யாணமெண்டு வரேக்கை”

“அதுக்கும் சாதீய அடக்குமுறைக்கும் என்ன சம்பந்தம். அவனவன் தனக்குத் தனக்கு ஏத்த இடத்தில கட்டிக்கொண்டு போறான். கல்யாணமெண்டுறது அவையவையின்ரை தனிப்பட்ட விருப்பம். ஏன் ஒரே சாதியா இருந்தாக்கூட கல்யாணம் கட்டிக்குடுத்திருவினமா? அந்தஸ்து அது இதெண்து ஆயிரத்தெட்டுப் பொருத்தம் பார்க்கிறதில்லை?”

கொய்யால! இவன் கனக்கக் கதைக்கிறான். விடக்கூடாது.

“அது தான்ரா நான் எனன் சொல்லுறனெண்டா மார்க்ஸ் சொல்லுறேர்...”

“ஆரு? பாட்ஷாவில வாற மார்க் அன்ரனியா?”

“உனக்குச் சொல்லவந்தன் பாரு..”  

அப்பாடா ஒருமாதிரி கதையை நிப்பாட்டியாச்சு. அவன் மார்க்ஸ் என்ன சொல்லுறேர் எண்டு கேட்டிருந்தா கொம்மியூனிஸம் சோஷலிஸம் எண்டு அவனைக் குழப்பி நானும் குழம்பியிருக்கவேணும். ஆள இந்த அளவுக்கு மேல போகவிடாம வைச்சிருந்தாத்தான் எனக்கு ஏதோ கனக்கத் தெரியுமெண்டு ஒரு மரியாதையோட இருப்பான்.

“பின்னால நிக்கிற ஆக்கள் முன்னுக்குப் போங்கோ. எவ்வளவு இடம் கிடக்கு. பின்னால ஆக்கள் ஏற இடமில்லாம நிக்கினம்” 

“கொண்டக்ரருக்கு வேற வேலையில்லை. முன்னுக்கு எங்கையாம் இடம் கிடக்கு?”

“கொஞ்சம் வழிவிடுங்கோ TATA ஒண்டு வருகுது”

அந்த இளைஞர்கள் கலாய்த்தார்கள். திரும்பினேன். பெரிய உருவம் Tata lorry போல். நெருக்கிக்கிருக்கி எனக்குமுன்னால் வந்தது. தன் தொப்பையின் ஒரு பக்கத்தை முன் இருக்கையிலும் மற்றப்பக்கத்தை என் தோளிலும் பொறுக்க வைத்துவிட்டு அது stand போட்டு நின்று கொண்டது. அசையா முடியாத சனநெரிசல். நண்பன் முறைத்துக் கொண்டான்.

ஓமந்தையை அடைகையில் மணி எட்டரையைத் தொட்டுவிட்டிருந்தது. இறங்கி சோதனைச்சாவடியில் வரிசையில் நின்று சோதனைகளை முடித்துவிட்டுக் காத்திருந்து பேரூந்தில் ஏறிக்கொள்ள ஒன்பதாகியிருந்தது. நடத்துநரைக் கண்ணில் காணவில்லை.

“மச்சான் கொண்டக்கரரிட்டை இண்டைக்கு மிச்சக்காசு வேண்டாம விடுறதில்லை”

“train க்கு சரியான நேரத்துக்குள்ள போயிருவமாடா?”

“அடேய் train க்கு 3rd class sleeperets ஏற்கனவே book பண்ணயாச்சு. பத்து மணியெண்டாலும் அது எப்பிடியும் பத்தரைக்குப்பிறகு தான் வெளிக்கிடும். பிறகேன் பயப்பிடுறாய்?”

“இல்லை மச்சான். வழமையா நான் AC bus இலதான் போறனான். அதில போனா பெரிசாக் களைப்பும் தெரியாது?”

“அதுக்கு ஆயிரத்தி முன்னூறு ரூபாய் குடுப்பாய். இது இப்ப எவ்வளவு? வவுனியா bus க்கு 180 ம் கொழும்பு train க்கு 270ம், ரோற்றலா 450 தானே. அதோட bus எண்டா ஒரு இடத்திலதான் நிப்பாட்டுவான். ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறதெண்டாலும் கரைச்சல். இது train க்குள்ள நீ விரும்பின நேரம் மூத்திரம் பெய்யலாம். கக்கூசுக்கும் இருக்கலாம். நித்திரை வராட்டி நடந்தும் திரியலாம். bus காரர் எவ்வளவு சுரண்டுறாங்கள் எண்டுறது இன்னும் உனக்கு வடிவா விளங்கேல்லையடாப்பா. எங்கட நாட்டை உண்மையான சோஷலிஸ நாடா மாத்தவேணுமடாப்பா.

“காணும் மச்சான் அறுக்காத நிப்பாட்டு”

வேகமெடுத்திருந்த பேரூந்த திடீரென நிறுத்தப்பட்டது. 

“Traffic police மறிச்சிற்றாங்கள். over speed ஆம்.”

பயணம் ஐந்து நிமிடம் தாமதமாகி வவுனியா பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டிருந்தது.. பயணிகளில் சிலர் தங்கள் தொடர் பயண அவசரத்தினைக் கருத்தில் கொண்டு மீதிக்காசை வாங்க மறந்தோ என்னவோ வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். 

“மச்சான் வாடாப்பா ஒன்பதே முக்காலாகுது. பிறகு train ஐ மிஸ் பண்ணீருவம்”

“train பத்தரைக்குத்தான் வெளிக்கிடும். இவங்கட schedule தெரியாதே? அதோட கொழும்பு train வந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகுதான் இங்கை நிக்கிற train வெளிக்கிடும். இண்டைக்கு மிச்சக் காச கொண்டக்ரரிட்டை இருந்து வாங்காம விடுறதில்லை. ஓமந்தைக்கு அங்கால தாறன் எண்டு சுத்திப்போட்டு ஆள் foot board இலயே நிண்டிட்டான். உனக்கும் இருபது ரூபாய் மிச்சம் தரவேணுமெல்லா. நிண்டு வேண்டிப் போட்டுத்தான் அடுத்த வேலை”

இறங்கி வெளியே வர நடத்துநரைச் சுற்றி 25 பேர் வரையிலானோர் நின்றிருந்தனர். தன்னிடம் நூறு ரூபாய்க்குக் குறைந்த தாள்கள் இல்லை என்பதால் பெரும்பாலானோருக்கும் இருபது ரூபாயைக் கழித்துக் கொண்டே மீதிப்பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு கடையில் சென்று காசு மாற்றிவிட்டு தருவதாகச் சொல்லவே பலரும் விலகிவிட நானும் அவனுமே எஞ்சினோம்.

“மச்சான் விட்டிட்டு வாடாப்பா. வேணுமெண்டா நான் அந்த இருபது ரூபாயைத் தாறன். இருபது ரூபாயைப் பார்த்து பிறகு நீ இருநூற்றியெழுபது ரூபா train ஐ விடப் போற”

“சத்தம் கேட்டனி தானே. இப்பத்தான் கொழும்பு train வருகுது. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு இஞ்சையிருந்து போற train வெளிக்கிட. இவர் மற்றாக்களுக்குச் சுத்தின மாதிரி எனக்கும் சுத்தப் பாக்கிறேர். முந்தியெண்டா விட்டிருப்பன். இப்ப மார்க்ஸ்ஸிஸம் தெரிஞ்சாப்பிறகு இந்தச் சுரண்டலையெல்லாம் என்னால விடேலாது மச்சான்.”

கடைக்குச் சென்று காசுமாற்றி இருவருக்குமான மீதிப்பணம் நாற்பது ரூபாவையும் பெற்றுக்கொண்டு திரும்புகையில் ஏதோ சாதித்து விட்டாற்போல் இருந்தது.

“மச்சான் ஓட்டோ பிடிச்சுப் போவமடா லேற்றாகீற்றுது”

“இப்பத்தான்ரா பத்து மணி. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு. அஞ்சு நிமிசத்தில நடந்தே போயிரலாம். இதுக்குப்போய் ஓட்டோக்காரனுக்கு நூறு ரூபாய் குடுக்கோணுமா?”

அவனின் பதற்றம் எனக்குச் சந்தோசத்தைத் தருவதாய்த் தோன்றியது.

“ஏன் மச்சான் ரென்ஷனாகிற. என்னைப் போல சும்மா கூலா வா. பாத்தியா மார்க்ஸிஸம் தெரிஞ்சதால இண்டைக்கு ஒரு சுரண்டல தடுத்திருக்கிறம்”.

அவன் அமைதியாகவே வந்தான். புகையிரத நிலையத்தை அடைகையில் புகையிரதம் கிளம்பிக்கொண்டிருந்தது. அதைப் பிடிக்க எத்தனித்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டிருந்தன.

அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.

“train இல்லாட்டி என்ன? ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒருக்கா bus இருக்குத்தானே. பொறு போய் ticket-ஐக் குடுத்துக் காசைத் திருப்பிக் கேப்பம்”

புகையிரத அலுவலகத்தில் ticket-இனைக் கொடுத்துக் காசைத் திருப்பிக் கேட்டபோது Not refundable என்று கூறி மறுத்து விடவே தோல்வியுடன் அவனிடம் வந்தேன். 

“மச்சான் refund தர மாட்டனெண்டுறாங்கள். Democratic Socialist Republic of Sri Lanka எண்டு பேரை வைச்சுக்கொண்டு Government ம் எங்களைச் சுரண்டுறாங்கள். Government office-இலயே சோஷலிஸம் இல்லையடாப்பா. நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

“சோஷலிஸமும் பு. . . .ம் சத்தம் போடாம வாறியா”

Sunday, October 14, 2012

'புதிய பண்பாட்டுத்தளம்' - பத்தோடு பதினொன்றாகுமா?


இன்றைய காலத்தின் தேவை(?) கருதி புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பொன்று, “புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற பெயருடன் தனது அங்குரார்ப்பண நிகழ்வினை கடந்த சனிக்கிழமை (13-10-2012) ஹற்றன் நகரில் நடாத்தியிருந்தது. பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களைச் (அரசியல் கட்சிகள் உட்பட) சேர்ந்தவர்களுடன் கலை இலக்கியத்துறையைச் சார்ந்த சிலரும் இந்நிகழ்வின் பங்காளிகளாய் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். பல்வேறு கலை இலக்கிய விழாக்களில் பார்வையாளனாய் பங்கேற்றிருந்தாலும், இதுபோன்ற கொள்கை அடிப்படையிலான அமைப்பொன்றின் நிகழ்வினை நேரடியாகப் பார்க்கக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.
 
“புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற அமைப்பின் கொள்கைகள் குறித்த அவர்களின் உரைகள், விமர்சனங்கள் மற்றும் பங்கேற்பாளரின் கருத்துரைகள் என்பவற்றிலிருந்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக சமுதாய மாற்றத்தினை உண்டுபண்ணுவதும், பல்வேறு அமைப்புக்களிலிருந்தும் விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு தளத்தினை உருவாக்குவதுடன் சமூக மேம்பாட்டிற்காக அனைத்து அமைப்புகளையும் இயன்றவரையில் ஒன்றிணைக்கும் ஒரு களமாகவும் இது அமையலாம் எனப்புரிந்தது. அதன் அமைப்பாளர்கள் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால், ஜனநாயகக் கட்சிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தயாராயிருப்பதாய் கூறியிருந்தனராயினும, அவர்கள் மார்க்சிச கொள்கைகளுக்கு அமைவாகவே தங்கள் செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மார்க்சிசம் பற்றிய அல்லது கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை பற்றிய தெளிவின்மை காரணமாக சம்பந்தப்பட்ட சிலருடன் உரையாடிய பின்னர் இணைய உதவியுடன் சில புரிதல்கள் என்னுள் ஏற்பட்டனவாயினும், இன்றைய சூழலில் இங்கே முதலாளித்துவத்தை ஒழித்து கொம்மியூனிசம் சாத்தியமா என்பது எனக்கு மிகப்பெரிய கேள்வியாகவே தெரிகிறது.
 
இது ஒரு நாடு தழுவிய வெகுஜன அமைப்பாக இருக்கப் போவதாலும், ஒற்றைத் தலைமைக்குப் பதில் கூட்டுத்தலைமையைக் கொண்டிருக்கப் போவதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்ததாலும், எனது அறிவிற்கெட்டிய இலங்கை தமிழ் அமைப்புக்களின் (அரசியற்கட்சிகளுட்பட) வரலாறுகளினாலும் சில கேள்விகள் எழுகின்றன. இந்த அமைப்பும் காலவோட்டத்தில் ஒரு அரசியற்கட்சியாக மாறி வாக்குக் கேட்க வந்து நிற்குமா? கூட்டுத்தலைமைக்குள் கொள்கை முரண்பாட்டாலோ அல்லது மற்றைய கட்சிகளைப்போல் அதிகார மோகத்தாலோ பிரிவினை தோன்றினால் என்ன நடக்கும்? (ஒற்றைத் தலைமையுள்ள அமைப்புக்குள் இந்தச் சிக்கல் குறைவு என்றே நினைக்கின்றேன்)
 
அப்படியான ஒரு நோக்கத்தில் உருவாக்கப்படும் ஒரு அமைப்பிற்கான தேவை இன்றைய சூழ்நிலையில் இல்லை என்பதால், அதன் அமைப்பாளர்கள் நேரடி அரசியலில் இறங்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். மாறாக, மார்க்சிச கொள்கைகளை வைத்து எப்படிக் கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை உருவாக்கப்பட்டதோ அதேபோல் சமூக விடுதலை சார்ந்த அரசியலுக்கான ஒரு அடிப்படையாக (framework) மக்களிடையே சமூகத்தளைகளினையறுக்கும்  விழிப்புணர்வினை உண்டுபண்ணும் தோற்றுவாயாக, இந்த வெகுஜன அமைப்பு மிளிரட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அனைத்துக் கட்சிகளையும் கூட்டிவைத்து ஆராயட்டும். ஒத்துப் போகும் அமைப்புகளை அணைத்துக்கொண்டு அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கட்டும்.
 
இல்லையெனில் இதுவும் பத்தோடு பதினொன்றாய்.........

Friday, June 8, 2012

பார்த்தீனியமும் அரசும்பார்த்தீபன் கொல்லப்பட்டதும்
பார்த்தீனியம் பரவியதும்
பார், தீனிக்கு வழியின்றி-இப்
பாரெல்லாம் பாழ்படுமென்றதும்...

ஊரெல்லாம் களையின்றிக்
களையகற்றிக் கடந்தோம்
யாரெல்லாம் வந்திங்கு
யாதெல்லாம் செய்தார்கள்?

அரசு துறந்தவர் -அன்று
அரசடியில் அமர்ந்தார். -இன்று
அரசு கண்ட, இடமெல்லாம்
அமர்த்துகிறது அவரை அரசு!அரசு களை.

Wednesday, May 30, 2012

வேரென நீயிருந்தாய்...(55)


20 Decempber 2002, வெள்ளிக்கிழமை மாலை. திட்டமிட்டிருந்ததிலும் சற்று நேரம் கழித்தே வீட்டிற்கு வரமுடிந்தது. வீட்டிற்கு வர நதீஷா ஆயத்தமாயிருந்தாள்.

“கெதியாப் போகவேணுமப்பா. இல்லையெண்டாப் பிறகு check point-ஐ மூடிருவாங்கள்.”

“ஓமப்பா கடைசி நேரத்தில meeting ஒண்டைப் போட்டுத் துலைச்சிற்றாங்கள். அதுதான் லேற்றாகீற்றுது. இனி ஓமந்தை bus கிடைக்குமோ தெரியாது. நாங்கள் motor cycle-இலயே வவுனியா வரைக்கும் போவம். நான் ஒருக்கா முகத்தை அலம்பீற்று ஓடியாறன். நீர் எல்லாத்தையும் ready பண்ணும். என?”

முகம் அலம்பி வர தயாராக அளவான சூட்டுடன் இருந்த தேனீரை அருந்திவிட்டு இருவருமே கிளம்பினோம்.

முறிகண்டிப் பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு உந்துருளியை விரைவாகச் செலுத்தியவாறே சென்று கொண்டிருந்தேன்.

“ஏனப்பா முன்னால வாறவங்கள் head light அடிச்சுக் காட்டுறாங்கள்?”

“ஓ! நான் கவனிக்கேல்லை.”

எட்டி எனது உந்துருளியின் முகப்பு விளக்கிற்கு (head light) முன்னதாக ஒரு கையை வைத்துப் பார்த்தேன். எனது உந்துருளியின் முகப்பு விளக்கு எரியவில்லை. பிறகு எதற்காக இந்த சமிக்ஞை கொடுத்திருப்பார்கள்? எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளி தனது வேகத்தைக்குறைத்துக் கொள்ள நான் அதை முந்தியிருந்தேன். எதிரே வந்த வளைவினில் திரும்ப, சற்றுத் தூரத்தில் வெண்ணிற மேற்சட்டையும் நீலநிற காற்சட்டையும் அணிந்திருந்த இரு காவற்றுறையினர் எம்மை வழிமறித்தனர்.

“oh shit! over speed-இல வந்திற்றம் நதீஷா. அதுதான் முன்னால வந்தவங்கள் signal போட்டுக் காட்டியிருக்கிறாங்கள். எங்களுக்கு தான் விளங்கேல்லை.”

உந்துருளியை அவர்களின் அருகே நிறுத்தினேன். அவர்கள் சிரித்துக்கொண்டே வேகமானியின் வாசிப்பினை என்னிடம் காட்டினார்கள். தண்டப்பணம் இருநுாறு ரூபாவிற்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

“நீங்க அவையோட கதைச்சுப் பார்த்திருக்கலாமப்பா. சும்மா ஒண்டும் கதைக்காம காசைக்குடுத்திற்று வாறீங்கள்”

“இல்லை நதீஷா. இவங்களோட கதைக்கேலாது. ஏனெண்டா எங்களிலதான் பிழை. சும்மா கதைச்சுக் கொண்டு நிண்டா நேரம் தான் போகும். ஒரு பிரியோசனமும் கிடைக்காது. பாருங்க அவங்கள் சிரிச்சுக் கொண்டுதானே நிக்கிறாங்கள். ஆனாலும் fine கட்டாமப் போக விடமாட்டாங்கள் இதே ஓமந்தைக்கு அங்காலையெண்டா முறைச்சுக் கொண்டு நிப்பாங்கள். ஆனா அம்பதோ (ஐம்பதோ) நூறோ குடுத்திற்றா விட்டிருவாங்கள்”

ஒருவாறாக எல்லைச் சோதனைச் சாவடிகள் மூடப்படுவதற்குள்ளாக ஓமந்தையைக் கடந்து விட்டிருந்தோம். வவுனியா நியாப்பில் வேலைசெய்யும் பொறியியலாளர்களின் குடியிருப்பில் உந்துருளியை விட்டுவிட்டு வந்தோம். 

“இனி கண்டிக்கு direct bus இருக்காது. வாங்க அநுராதபுரம் போய்ப் போவம்.”

அநுராதபுரத்தினை அடைந்து அங்கிருந்து கண்டிக்குப் பயணமாகி கட்டுகஸ்தோட்டையை அடைகையில் நேரம் இரவு 11.30 ஐத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் காலையில் கண்டி நகருக்குச் சென்று எங்கள் பட்டமளிப்பு விழாவிற்குத் தேவையான ஆடைகளைத் தைக்கக் கொடுத்துவிட்டு வந்தோம்.

“நாளைக்கு நாங்க ஒருக்கா டொக்ரரிட்டைப் போவமாப்பா?”

நெஞ்சுக்குள் திக்கென்றாலும் அதை மறைத்துக் கொண்டு,

“ஏன்? என்னத்துக்கு?”

“இல்ல... எனக்கு பீரியட்ஸ் பிந்தி ஒருகிழமையாகிற்றுது. அதுதான் ஒருக்கா டொக்ரரிட்டைப் போய்ச் செக் பண்ணீற்று வருவம்.”

“சரி உம்மட விருப்பம்”

“அப்ப நான் டொக்ரரிட்டை இண்டைக்கே book பண்ணுறன் என?”

“ஓம்”

“என்ன நீங்க? ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கிறீங்க?”

“சீ! எனக்கொண்டுமில்லை. நேற்று முழுக்க அலைஞ்சதுதானே. அதுதான் tired-ஆ இருக்கு”

“அப்ப நீங்க சாப்பிட்டிட்டுப் படுங்கோ. நான் பிறகு எழுப்பிறன்”

மாலை வைத்தியரின் அறையில் இருந்தோம். நதீஷாவின சிறுநீர் மாதிரியைப் பரிசோதித்து விட்டு,

“Congratulations! It's positive”

நதீஷாவின் முகம் சந்தோஷம், பெருமிதம், பரவசம் எல்லாம் கலந்து காட்சியளித்தது.

வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு, நதீஷாவிற்காக படுக்கையில் காத்திருந்தேன்

“என்ன நீங்க? காலமையிலயிருந்து பார்க்கிறன். ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?”

“இல்லையே.. நான் நல்லாத்தானே இருக்கிறன்”

“பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு இப்ப குழந்தைவாறது பிடிக்கேல்லையா?”

“என்ன நீங்க? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஏன் நானும் சந்தோஷமாத்தானே இருக்கிறன்”

“இல்லை. டொக்ரர் positive எண்டு சொல்லேக்குள்ள உங்கட முகம் ஒருமாதிரிப் போய்ற்றுது. நான் கவனிச்சனான்”

“நீங்க சும்மா குழப்புறீங்க”

“நீங்கதான் மழுப்புறீங்க. உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை? please...”

மாவீரர் நாள் இரவு வந்து மனதில் உறுத்தியது. அன்றைக்குத்தான் கர்ப்பம் தரித்திருக்குமோ? அன்றைய அந்த நிகழ்வு முடிகையில் என் சுவாசநாடி 'ஈதா'வாகவுமில்லாமல் 'பிங்காளா'வாகவுமில்லாமல் சமச்சீராக இருந்ததே. சாத்திரங்களில் சொல்லப்படுவது உண்மையானால் இந்தக்கரு ஆணுமன்றி பெண்ணுமன்றியல்லவா இருக்கும். இதை எப்படி இவளிடம் சொல்வது? கடவுளே சாத்திரங்கள் பொய்யானதாக இருந்துவிட வேண்டும். கர்ப்பிணியாய் இருக்கும் இவளைக் கவலைப்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. முகத்தில் சிரிப்பினைத் தவழவிட்டேன்.

“சரி உண்மையைச் சொல்லுறனே. டொக்ரர் positive எண்டு சொன்ன உடனே எனக்குப் பயம் வந்திற்றுது. வரேக்குள்ளை ரெண்டுபேரும் motor cycle-இலதானே வந்தம். அது ஏதும் affect பண்ணுமோ எண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தன்”

“சரியான லூசப்பா நீங்க. அதெல்லாம் ஒண்டும் affect பண்ணாது.”

“எண்டாலும் இனி நீர் கவனமாயிருக்க வேணும். கண்டபாட்டுக்கெல்லாம் இனி வேலைசெய்யக்கூடாது”

“அய் பெண்டாட்டியில இவ்வளவு நாளும் இல்லாத பாசம் இப்ப பிள்ளை வருகுதெண்ட உடனே பொத்துக் கொண்டு வருகுது போல”

“ம்ம்ம். அப்பிடியெண்டே வைச்சுக்கொள்ளுமன்”

“பார்ப்பம் பார்ப்பம் வாற பெடியன் அப்பருக்கு எப்பிடியெல்லாம் அலுப்படிக்கிறான் எண்டு”

“என்னெண்டு சொல்லுவீர் இது பெடியனெண்டு? நான் சொல்லுறன் இது பெடியனில்லை” - நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

“ஏன் கவலைப்படுகிறீங்க? இன்னும் மூண்டு மாசத்தில scan பண்ணினா தெரிஞ்சிரும் தானே?”

“உமக்கு அப்பிடி scan பண்ணிப் பார்க்க விருப்பமா?”

“ஏன் உங்களுக்கு விருப்பமா?”

“எனக்கு விருப்பமில்லை”

“எனக்கும்தான். ஆம்பிளைப்பிள்ளையெண்டான்ன பெம்பிளைப்பிள்ளையெண்டான்ன இது எங்கட பிள்ளை. அது வெளியில வரேக்கை பார்க்கலாம். அப்பத்தான் அதில கூடத் திரில்லிங்கா இருக்கும்”

“Thanks நதீஷா! என்ன பிள்ளையெண்டாலும் அது எங்கட பிள்ளை. ஆனபடியா அது எப்பிடியிருந்தாலும் நாங்க சந்தோஷமா அதை வளர்க்க வேணும். சரியா”

“அதிலயென்ன சந்தேகம் உங்களுக்கு”

“சரி அப்ப வாங்கோ. நான் எங்கடை பிள்ளையைக் கொஞ்ச வேணும்”

“ஆ! ஆசைதான். அதெல்லாம் இப்ப செய்யேலாது”

“நான் பிள்ளையைக் கொஞ்சப்போறன் எண்டுதானே சொன்னனான். வேறையேதுஞ் செய்யப்போறனெண்டு சொல்லேல்லையே”

“வேறையொண்டும் செய்யாமத்தான் இப்ப பிள்ளை வந்ததோ?”

“அட கள்ளி!”

***********

26 December 2002 எங்களுக்கான பட்டமளிப்புவிழா நாள். காலையிலேயே பல்கலைக்கழக வளாகமெங்கும் களைகட்டியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் முதல்தடவையாக வடபகுதியிலிருந்தும் மாணவர்களின் உறவினர்கள் தரைமார்க்கமாக பேராதனைக்கு வரக்கூடியதாக இருந்ததால் பெருமளவிலான தமிர்களும் அங்கே வந்திருந்தனர். குழுக்களாகப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்களை அணிவகுத்துவரச் சொன்னார்கள். அக்பர் பாலத்தின் கீழாக, இலங்கையின் மிகநீண்ட நதியான மகாவலி நதியினருகாகச் செல்லும் லவ்வர்ஸ் லேன்-ஊடாக எங்கள் அணிவகுப்பு நகர்ந்து கொண்டிருந்தது. இங்கேயும் எங்கள் பதிவிலக்கத்தின் படியே நானும் நதீஷாவும் அருகருகே, 

“நதீஷா! .இப்பத்தான் லவ்வேர்ஸ் லேனுக்குள்ள ரெண்டுபேரும் வாறம் என”

“என்ன செய்யிறது? நீங்க துணிச்சல் உள்ள ஆம்பிளையா இருந்திருந்தா, நாங்க எப்பவோ வந்திருக்கலாம்”

“சொல்லுவீங்கடா! Engagement முடிஞ்சாப்பிறகு ஒருநாள் போவமோ எண்டு கேட்டதுக்கு, டீசன்ற் இல்லை எண்டு சொல்லிப்போட்டு இப்ப இப்பிடிச் சொல்லும்”

“அது அண்டைக்கு. நீங்க அடுத்த நாளும் கேட்டிருக்கலாம் தானே. உங்களுக்கும் பயம் பிறகு கதைக்கிறீங்க. ஆனா பாத்தீங்களா எங்கட பிள்ளை எவ்வளவு துணிச்சல்காரனெண்டு? வயித்திலயிருந்து வெளிய வாறதுக்கு முதலிலேயே அவன் லவ்வர்ஸ் லேனுக்குள்ள வந்திற்றான்.”

“உங்களை.....”

“என்ன உங்களை?”

“வேண்டாம் சும்மா இருங்கோ. பக்கத்திலையெல்லாம் ஆக்கள் இருக்கினம்”

“பக்கத்திலை ஆக்கள் இருக்கேக்குள்ளை சும்மா இருக்கச் சொல்லுறீங்கள். அறிவில்லை?”

“அம்மா தாயே ஆளை விடுங்கோ. ஒழுங்கா convocation-ஐ முடிச்சிற்று வீட்ட போய்ச் சேருவம்”.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54

Friday, May 18, 2012

வேரென நீயிருந்தாய்... (54)

2002 ஒக்ரோபர் 24, வியாழக்கிழமை. எங்கள் மணவாழ்க்கையின் 6ஆம் மாத நிறைவினை ஒட்டி வேலைக்கு விடுமுறை எடுத்து கண்டிக்கு நதீஷாவின வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்றைய இரவு,

“இஞ்சேருங்கப்பா! நான் ஒண்டு சொல்லுவன் நீங்க கோபிக்கக்கூடாது”

“என்னெண்டு சொல்லுமன்”

“இல்லை நாங்க நாளைக்கு ஒருக்கா டொக்ரரிடை்டைப் போவமே?”

“நீர் திருந்த மாட்டீர்”

“இல்லையப்பா டொக்டரிட்டைப் போய் என்ன பிரச்சினையா என்னெண்டு தெரிஞ்சுதெண்டா நிம்மதியா இருக்கலாம் தானே. இப்ப IVF எல்லாம் இஞ்சையும் வந்திற்றுதாம் எண்டு கேள்விப்பட்டன்”

“என்ன சொன்னாலும் நீர் கேட்கப்போறேல்ல. சரி உம்மட விருப்பம்.”

“உண்மையாவா? அப்ப நாளைக்கு நான் appointment-ஐக் confirm பண்ணவா?”

“ஓ appointment எல்லாம் எடுத்திற்றீரா? இது எப்ப நடந்தது?”

“நான் என்ரை friend ஒருத்தியிட்ட அங்கையிருந்தே phone பண்ணி arrange பண்ணின்னான்”.

“ம்ம்ம். நீர் இவ்வளவு அவசரப்படுற படியா நாளைக்குப் போவம். ஆனா பாரும் டொக்ரர் ஒரு பிரச்சனையும் இல்லையெண்டுதான் சொல்லுவேர்.”

மறுநாள் மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா சோதனைகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொண்டோம். ஞாயிற்றுக்கிழமை வந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ளச் சொன்னதால் ஞாயிறு காலை அவரிடம் சென்றிருந்தோம்.

“Nothing to worry. Both of you are OK."

“Then why doctor? It's already 6 months, but I didn't conceive yet.”

“It may be due to stress. Are both of you happy in your married life?"

“Yes! of course”

“I think either both or one of you are under stress during your intercourse. For some people it happens. Any way as both of you are young enough you can wait for another 6 months. I can advice you to take a 1 week trip to go some nice places as honeymoon to enjoy the life without any stress”

வீட்டினை அடைந்தோம். நதீஷா இப்போது சந்தோஷமாக இருந்தாள்.

“சொன்னன் தானே எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையெண்டு”

“எனக்கு ஒரு உண்மை சொல்லுவீங்களா?”

“என்ன?”

“உங்களுக்கு இந்த life, stress ஆவா இருக்கு?”

“என்ன நீங்க? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்”

“அப்ப டொக்ரர் சொன்னேர்.”

“அவர் என்னையா சொன்னவர்? நான் நினைச்சன் உங்களுக்குத்தான் stress என்று”

“நீங்க என்ன லூசா? எனக்கென்ன stress? நான் எவ்வளவு சந்தோஷமா உங்களோட இருக்கிறன். இது என்ரை dream life”

“சரி அப்ப விட்டிட்டு relax இருங்கோ. சும்மா கவலைப்பட்டுக் கொண்டிருக்காம ஏதாவது வேலைக்கு apply பண்ணுங்கோ”

2002 நவம்பர் இறுதி வாரம். சமாதானம் வந்ததன் பின்னான முதலாவது மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டிருந்தது. 26 ஆம் திகதி இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க மாவீரர் துயிலும் இல்லத்திற்கு என்னையும் அழைத்துக் கொண்டு விரைந்தாள் நதீஷா.

துயிலுமில்லம் முழுவதும் கனத்த இதயங்களுடன் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள்
உறவினர் வந்துள்ளோம்.

அக்காவைப் போன்றவர்களுக்கான பொதுவிடத்தில் அஞ்சலி செலுத்த நின்றவர்களுடன் இணைந்து கொண்டோம். நெஞ்சு பனிக்க கண்ணீர் உகுக்க உருகி நின்றோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

வீட்டினை அடைகையில் அக்காவின் நினைவுகள் அலைமோதின. இதோ அக்காவிற்காக என்னுடன் வந்து இவளும் அஞ்சலி செலுத்தியிருக்கிறாள். ஆனால் அவளது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இவள் தந்தையைப் பற்றி என்றைக்கேனும் நான் சிந்தித்துப் பார்த்திருக்கின்றேனா? சிறிலங்காவின் காவல் துறையில் இருந்தாலும் அவர் யாரேனும் தமிழர்களைக் கொன்றதாகவோ கொடுமைப் படுத்தியதாகவோ இல்லையே. படையிலிருந்த அவளது அண்ணனைப் போல் அவரைக் கருத முடியாதே. இன்றைய தினத்தில் அவருக்கும் அஞ்சலி செய்வதுதான் முறையாக இருக்கும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒன்றும் தப்பல்ல. அதுதான் மனிதத்தன்மை. அவலச்சாவில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையாமல் அலைந்து கொண்டேயிருக்குமாம். அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து அவை சாந்தியடைவதற்குரிய செயல்களைச் செய்யவேண்டியது உயிருள்ள மனிதர்களின் கடமை. தன் தந்தையைக் கொன்றவளுக்கே வந்து அஞ்சலி செலுத்தும் நதீஷா எங்கே? நான் எங்கே?

வீட்டினை அடைந்து முதலில் நான் குளித்துவிட்டு வர நதீஷா குளிக்கச் சென்றாள். அவள் வந்ததும் .அவள் கண்களை மூடி அவளை சாமியறைக்கு அழைத்துச் சென்று கண்களை விடுவித்தேன். அதிர்ச்சியடைந்தவள் கண்களினின்றும் கண்ணீர் பெருக்கெடுக்க,

“மகே தாத்தே...”  கேவினாள்.

அவளை ஆதுரத்துடன் தாங்கிக்கொண்டேன். என்னில் சாய்ந்து கொண்டாள். அக்காவினதும் அவள் தந்தையினதும் படங்கள் அருகருகே வைக்கப்பட்டு விளக்கேற்ப்பட்டிருக்க இருவரும் இணைந்து அவர்கள் இருவருக்குமாய் எங்களின் அஞ்சலியைத் செலுத்தி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தோம்.

“Thanks-ங்க thank you so much-ங்க. இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”

“ஓ!” புன்னகைத்துக் கொண்டேன்.

“என்னடா சும்மா ஓ எண்டு மட்டும் சொல்லிப்போட்டு நிக்கிற?”

“ஆ! என்ன எடா புடா எண்டு வாய் நீளுது?”

“அதுக்கு இப்ப என்னடா செய்யப் போற?”

“எனக்கும் நீளும்”

“ஓ..ஓ!”

“இல்லை. நான் உண்மையாக் கையைத்தான் சொன்னான்”

“ஆ! ச்சீ! போடா கள்ளா. உன்னை”

அவள் என்றுமில்லாதவாறு மிகுந்த சந்தோஷத்துடனும் கிளர்ச்சியுடனும் இருப்பது புரிந்தது.

அல்லி மலர்வது இரவு நேரத்தில
மல்லி மலர்வது மாலை நேரத்தில
பெண்மை மலர்வது எந்த நேரத்தில
என்று கணடு பிடிச்சு...

“என்ன உன்னை எண்டிட்டு நிப்பாட்டீற்றீர்?”

“ஏன் ஐயாக்கு கட்டாயம் மிச்சத்தையும் சொல்ல வேணுமாமோ?

”ஓம்”

“சொல்லாட்டி என்ன செய்வேராம்”

“அடிப்பேராம்.”

“ஏலுமெண்டா அடிக்கட்டும் பார்ப்பம்”

எட்ட, அவள் விலக சறுக்கி இருவருமாய்க் கட்டிலில் விழுந்தோம். கைபற்றினேன். சிலிர்த்தாள் சிணுங்கினாள். அன்றைய தீண்டலில் புதிதாய்த் தெரிந்தாள். அனைத்துமே புதிதாய் நீண்டு சென்ற இரவில் உறவும் நீள  பரவசமாய் பரமசுகம். தந்ராவின் நாற்புள்ளி, முப்புள்ளி நிலைகள் தாண்டி சக்கர நிலையை அடைந்ததாய்... பரமானந்த நிலை தொடர... அந்த அற்புத தருணங்களில் அக்காவும் நதீஷாவின் அப்பாவும் மாறிமாறி வந்து போக, ஓஷோவின் காமத்தினூடாக கடவுளைக் காணுதல் இதுதானோ?

ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..
பனியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு...

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்டாண்டுகாலமாய்த் தொடர்ந்துவரும் துவந்த யுத்தம் முடிவடைய பெருக்கெடுத்திருந்த வியர்வை வெள்ளமாய் ஓட, சட்டென நினைவு வந்தவனாய் மூச்சுக்காற்றினை உற்றுப் பார்த்தேன். அது 'ஈதா'-வும் 'பிங்காளா'-வுமாயும் .இல்லாமல் இடது மூச்சும் வலதும் மூச்சும் சமமாய் இருக்க நெஞ்சுக்குள் திக்கென்றது.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53

வேரென நீயிருந்தாய்... (53)2002 ஜுன் இறுதிப்பகுதி, நியாப் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பொறியியலாளர்களில் நானும் ஒருவனாய், கிளிநொச்சி மாவட்டத்திற்கு எனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். நதீஷாவும் போதனாசிரியர் வேலையை விட்டுவிட்டு என்னுடன் கிளிநொச்சிக்கு வருவதாய் அடம்பிடிக்கவே இருவருமே கிளிநொச்சிக்கு எமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டோம். ஆரம்ப நாட்களில் எங்கள் மீதான கண்காணிப்பினை உணரக்கூடியதாயிருந்தாலும் நாளடைவில் நாங்களும் கிளிநொச்சிவாசிகளாகி விட்டிருந்தோம். வேலை முடிந்து வந்த நேரம் நதீஷா யோசனையுடன் இருந்தாள்.

“நதீஷா உங்களுக்கு வீட்டில தனிய இருக்கிறது போரடிக்குதெண்டா வேலைக்கு apply பண்ணுங்க. இப்ப UNDP, UNOPS எல்லாம் வேலைக்கு ஆக்களை எடுக்கப்போறதாமெண்டு கதை அடிபடுகுது.”

“நாங்க எங்களுக்கெண்டு ஒரு family-ஐ உருவாக்கிற்று அதுக்குப்பிறகு வேலைக்குப் போறன்”.

“என்ன சொல்லுறீங்க நீங்க? நாங்க இப்ப family-யாத்தானே இருக்கிறம்”

“உங்களுக்கு நான் சொல்லுற family-யின்ரை அர்த்தம் விளங்குதில்லை”

“அப்ப விளக்கமாச் சொல்லுங்கவன்”

“முதலில என்ன நீங்க எண்டு போட்டுக் கதைக்கிறதை நிப்பாட்டுறீங்களா?”

“ஏன்? ஏன் திடீரெண்டு அப்பிடிச் சொல்லுறீங்க”

“நான் இஞ்சையிருக்கிற மற்றாக்களை வடிவா note பண்ணின்னான். அவையெல்லாம் தங்கடை மனிசிமாரை நீங்க எண்டா கூப்பிடுகினம்”

“இப்ப என்ன சொல்லவாறீங்க நீங்க?”

“என்னப்பா நீங்க? இதுகூட விளங்காம?”

“விளங்காமத்தானே கேக்கிறன்”

“விளங்காட்டிப் போய் விளக்குமாத்தை எடுத்து முத்தத்தைக் கூட்டுங்கோ விளங்கும்”

“ஓ! முத்தத்தைக் கூட்டச் சொல்லுறீங்களோ! இப்ப விளங்குது மகாராணியார் என்னத்தைச் சொலலுறா எண்டு. இரவு வரட்டும்”

“என்ன நீங்க? ஒருமாதிரிக் கதைக்கிறீங்? இதில ஏதோ double meaning இருக்குப் போல”

“ஓ அப்பிடியா. நான் single meaning-இல தான் சொன்னனான்.”

“ஐயோ! நீங்க கதையை மாத்தீற்றீங்க. நான் சொன்னனான் என்ன நீங்க எண்டு சொல்லதீங்க. மற்றப் பொம்பிளைகளின்ரை புருஷன்மாரெல்லாம் நீங்க போட்டா அவையோட கதைக்கினம். உரிமையா நீ எண்டு சொல்லித்தானே கதைக்கினம்”

“ஐயோ கடவுளே! என்னையும் அவையை மாதிரி மரியாதையில்லாமலா கதைக்கச் சொல்லுறீங்க”

“உங்களுக்குத்தான் ஒண்டும் விளங்குதில்லை. நீயெண்டு சொல்லி நீங்க என்னோட கதைச்சா இன்னும் கூட close ஆ இருக்கும். அதை விட்டிட்டு இப்பவும் campus இல கதைச்சமாதிரி நீங்க எண்டு கதைச்சா ஒரு கிக் இல்லாம இருக்கு”

“ஓ! அம்மாவுக்கு இப்ப கிக் தேவைப்படுகுதோ”

“இஞ்சேருங்கோ! நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குதில்லை பாருங்கோ.”

“ஆகா! typical தமிழ் பொம்பிளையளாட்டம்.”

“அப்ப இப்ப விளங்குதேங்கோ? என்னை இனி நீங்க எண்டு கூப்பிடாதேங்கோப்பா”

“சரிசரி அப்ப இனிநான் உங்களை நீர் எண்டு கூப்பிடுறன்”

“பிறகும் பாருங்கோவன்.”

“நீர் என்னப்பா? விடமாட்டீர் போல”

“ஆ! இது! இப்பிடி நீங்க சொல்லுறதைக் கேக்க இன்னும் கூட romance-ஆ இருக்கு”

“அப்ப இண்டைக்கு இரவு நல்ல விருந்து போல”

“அப்ப இவ்வளவு நாளும் இல்லையோ?”

“சரிசரி விடுங்க. sorry! விடும். இரவைக்குப் பாக்கலாம்.”

“சரி நீங்க போய்க் குளிச்சிற்று வாங்கோ. நான் புட்டவிக்கிறன்.”

இரவுணவினை அருந்திவிட்டு வெளியே வந்து நிலவு வெளிச்சத்தில் முற்றத்தில் அமர்ந்தோம். இளந்தென்றல் இதமாக இருந்தது. நதீஷா இப்போதும் ஏதோ யோசனையுடன் இருப்பதாகவே பட்டது.

“நான் அப்போதே கேக்கவேணுமெண்டு நினைச்சனான். பிறகு கதையில விடபட்டிட்டுது. என்ன ஒரே யோசனையா இருக்கிறீஙக. sorry இருக்கிறீர்?”

“ஒண்டுமில்லை”

“பரவாயில்லைச் சொல்லும்.”

“இல்லை சொன்னா நீங்க எப்பிடி எடுத்துக் கொள்ளுறீங்களோ?”

“என்ன நீர்? இப்பிடியேன் கதைக்கிறீர்?”

அவளருகே சென்றமர்ந்தேன். என் மடியினில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள். அவள் கூந்தலைக் கிளைந்து விட்டவாறே,

“சொல்லும் நதீஷா! என்னத்துக்கு யோசிக்கிறீர். இஞ்சையிருக்க உங்களுக்குப் பிடிக்கேல்லையா? அப்பிடியெண்டா நாங்க கொழும்புக்குப் போவம்.”

“ஐயோ! நீ்ங்க என்ன கதைக்கிறீங்க?”

“அப்ப என்னத்துக்கு யோசிக்கிறீர்?”

“எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு எத்தினை நாளாச்சு?”

“என்ன திடீரெண்டு?”

“கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கவன்”

“ஏப்ரல் 24 இல கல்யாணம் நடந்ததெண்டா இப்ப மே, ஜுன், ஜுலை மூண்டுமாசமாச்சுது. அதுக்கென்ன?”

“இல்லை. நாங்க எல்லாம் சரியாத்தானே செய்யிறம்?”

“என்ன நீங்க? நாங்க என்ன பிழை விட்டனாங்க?”

“இல்லை மூண்டுமாசமாச்சு இன்னும் ஒண்டையும் காணேல்லை”

“என்ன???? அட! இப்ப அதுக்கென்ன அவசரம்?”

“இல்லை நாங்க வேண்டாமெண்டு இருக்கேல்லைத்தானே. அதுதான் யோசனையா இருக்கு. வேணுமெண்டா ஒருக்கா டொக்டரிட்டைப் போய்ப் பார்ப்பமா?”

“உங்களுக்கென்ன விசரா? டொக்டரிட்டைப் போனாலும் அவர் கல்யாணம்கட்டி ஒரு வருஷம் வரைக்கும் பார்க்கச் சொல்லுவேர். நீங்க மூண்டு மாதத்துக்குள்ளயே கவலைப்படுறீங்க.”

“இல்லை எனக்கு எங்கட குழந்தை வேணும்.”

“எங்களுக்கு இப்பத்தான் 26 வயசு. பிறகேன் கவலைப்படுறீங்க?”

“மூண்டு மாசமா ஒண்டையும் காணேல்ல.......”

“சரி உங்களுக்கு ஆம்பிளைப்பிள்ளையா பொம்பிளைப்பிள்ளையா வேணும்?”

“ரெண்டும் வேணும்”

“எது முதல் வேணும்?”

“ஆம்பிளைப்பிள்ளை. உங்களுக்கு?”

“எனக்குப் பெம்பிளைப்பிள்ளைதான் வேணும்”

“ஏன்?”

“எல்லா ஆம்பிளைகளுக்கும் பெம்பளைப்பிள்ளை தான் பிடிக்கும். அதேபோல பெம்பிளைகளுக்க ஆம்பிளைபை் பிள்ளை பிடிக்கும்”

“ஏனப்பிடி? எனக்கு முதலாவதாத்தான் ஆம்பிளைப்பிள்ளை. அடுத்தது பெம்பிளைப்பிள்ளை தான் வேணும்”

“ஆகா! முதலாவதையே இன்னும் காணேல்லை. அதுக்குள்ள ரெண்டாவதுக்கும் போய்ற்றீங்களா?

“ம்ம்ம்...அதுதான் என்னெண்டு தெரியாது. இண்டைக்கு ஒரே பயமாவும் யோசனையாவும் கிடக்கு”

“சரி அப்ப விளக்குமாத்தை எடுத்துக் கொண்டு வாங்க”

“என்ன?”

“சரி விடுங்க. அதை என்னத்துக்கு? முத்தத்தைக் கூட்டுறன். நீங்க எண்ணிக்கொள்ளுங்க. அவ்வளவையும் திருப்பித் தரவேணும் சரியா? எண்ணுங்க ஒண்டு...”

“வேணாம்........” 

அந்த வேணாம் என்பதன் அர்த்தம் இன்னும் வேண்டும் என்பதை இந்த மூன்று மாதகால தாம்பத்திய வாழ்க்கை சொல்லித் தந்திருந்தது.

பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50   பாகம்-51   பாகம்-52

Monday, April 9, 2012

வேரென நீயிருந்தாய்...(52)

அம்மாவின் அந்திரெட்டியை சாட்டிக்கடற்கரையில் முடித்துவிட்டுப் பின் வீட்டுக்கிருத்தியத்திற்குப்பதிலாக திருநெல்வேலி முத்துத்தம்பி பள்ளிக்கூடத்தில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் மதியபோசனத்தையும் முடித்துவிட்டு மறுநாள் நதீஷாவும் நானும் காலையிலேயே புறப்பட்டு வவுனியா வந்து கண்டிக்குப் பயணமானோம்.

“ஒருமதிரி அம்மாவின்ரை அலுவல்கள ஒழுங்காச் செய்து முடிச்சிற்றம் என?”

“ஓம். நீங்களும் என்னோட வந்ததால எனக்கும் பெரிய துணையா இருந்திச்சு”

“வாழ்நாள்பூரா இனி நாங்க ரெண்டுபேரும் ஒராளுக்கொராள் துணையாத்தானே இருக்கப்போறம்”

“ம்ம்ம்... பார்த்தீங்களா? மூண்டு நாளைக்குமுதல் குருந்துவத்தையிலயிருந்து வெளிக்கிடேக்குள்ள தனியாளா அடுத்து என்ன செய்யிறது எண்டே தெரியாம வெளிக்கிட்டன். ஆனா இண்டைக்கு?”

“ஏன் இண்டைக்கு என்ன?”

“இண்டைக்கு என்னவா? அண்டைக்கு வெளிக்கிடேக்குள்ள எனக்கெண்டு ஒருத்தரும் இருக்கேல்ல. ஆனா இண்டைக்கு எனக்கெண்டு காதலியா, மனைவியா, அம்மாவா எல்லாத்திலும்விட ஒரு நல்ல friend ஆ, எல்லாமா நீங்க இருக்கிறீங்க. இதைவிட வேற எனக்கென்ன வேணும்?”

“ஹலோ சேர்! இன்னும் எங்களுக்குக் கல்யாணம் ஆகேல்ல. அதுக்குள்ள wife எண்டெல்லாம் கதைக்க வெளிக்கிடுறியள்”

“என்னைப் பொறுத்தவரைக்கும் அக்காக்கு முன்னால அம்மா வாங்கின சங்கிலியப் போட்டதுதான் நான் உங்களுக்குக் கட்டின தாலி. ஆனபடியா இப்ப நீங்க என்ரை wife. அதாலதான் அந்திரெட்டி செய்யேக்குள்ள உங்களை எள்ளும் தண்ணியும் இறைக்கச் சொல்லிவிட்டது”

“ஓ! அப்ப இனி அடுத்து என்ன செய்யப் போறம்?”

“கல்யாணம் முடிஞ்சா அடுத்தது என்னவெண்டு தெரியாதா?”

“வேண்டாம். உங்கட பேச்சும் பார்வையும் ஒருமாதிரிப் போகுது”

“ஏன்? என்ன மாதிரிப் போகுதாம்?”

“இப்ப எதுக்கு இவ்வளவு கிட்டவா உங்கட முகத்தைக் கொண்டுவாறீங்க?”

“நான் கதைக்கிறது உங்களுக்கு வடிவாக் கேக்கேல்லையோ எண்டு நினைச்சுத்தான்”

“அதெல்லாம் வடிவாக் கேக்குது. நீங்க வடிவா comfortable-ஆ முதல் இருந்து வந்தமாதிரியே இருந்து கதையுங்கோ. எனக்கு காது வடிவாக் கேக்கும்”.

“உங்களை.....”

“என்ன உங்களை? ஏன் நிப்பாட்டீற்றீங்கள்? மிச்சத்தையும் சொல்லுங்கோ”

“இல்ல நான் சொல்ல மாட்டன்”

“பரவாயில்லை சொல்லுங்க”

“ஊஹும், நான் சொல்ல மாட்டன்”

“அய்! வெக்கத்தைப்பாரு. சும்மா சொல்லுங்க...”

“போங்கோ நீங்க. நான் இனி உங்களுக்கு ஒண்டுமே சொல்ல மாட்டன்”

தலையைத் திருப்பிக் கொண்டேன்.

“அச்சாப்பிள்ளை! என்ரை செல்லமெல்லா! எனக்குச் சொல்லுங்கவன்”

தன்கைகளிளால் என் முகத்தினைத் தன்னை நோக்கித் திருப்பினாள். இருவர் முகங்களும் நேரெதிரே மிகச்சிறிய இடைவெளியில்....... அவள் கண்கள் காந்தமாய் என்கண்களை ஈர்த்துக் கொண்டிருக்க வைத்தவிழி வாங்காமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக .....


எனக்குள் ஏதோவெல்லாம் செய்தது, கண்கள் தாமாகவே தாழ்ந்தன.

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே


ஒருவர் மூச்சுக்காற்று மற்றவர்மேல் உஷ்ணத்தை உண்டாக்கியது. இன்னும் விட்டால் எங்கள் கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடலாம் என்கின்ற விழிப்புணர்வு வர

திரும்பிக் கொண்டேன்.

“நாங்க கண்டியில சின்னதா engagement வைப்பமா?”

“உங்களை disturb பண்ணீற்றனா ஜேந்தன்? I'm sorry. நான் வேணுமெண்டு செய்யேல்ல”

“நான் சீரியசாத்தான் கேக்கிறன். எதுக்கு நாங்க wait பண்ணவேணும்”

“அம்மா செத்து ஒரு வருஷம் ஆனாப்பிறகுதானே...”

“இது அம்மா விரும்பின கல்யாணம். அதோட இன்னும் கொஞ்ச எங்கட நாளில வருஷப்பிறப்பும் வந்திரும். அதுக்குப்பிறகு செய்யலாம் தானே. சிலபேர் அப்படிச் செய்யிறவை”

“உங்கட விருப்பம் ஜேந்தன்”

“ஏன்? அப்ப உங்களுக்கு விருப்பமில்லையா?”

“என்ன கதைக்கிறீங்க நீங்க? நான் உங்களை உங்கட சொந்தக்காரர் ஏதும் சொல்லுவினமோ எண்டுதான் யோசிக்கிறன்”

“மற்றாக்களுக்காக நாங்க வாழேலாது. இது எங்கட வாழ்க்கை.. எங்கட விருப்பப்படிதான் நாங்க வாழவேணும். மற்றாக்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருந்தாச் சரி”

“அப்பிடியெண்டால் எனக்கு double OK.”

“சரி நதீஷா! அப்ப நாங்க இனி எங்கடபாட்டில நித்திரையைக் கொள்ளுவம்”

“ஏன்? உங்களுக்கு நித்திரை வருகுதா?”

“வரயில்லைத்தான். ஆனா இப்பிடி உங்களுக்குப் பக்கத்திலையிருந்து பார்த்துக்கொண்டிருந்தா ஏதும் தப்புத்தண்டா நடந்திருமோ எண்டு பயமாயிருக்கு”

“ஹலோ சேர், நீங்க இப்ப bus-க்குள்ளதான் இருக்கிறீங்க”

“எங்கட முதல்முத்தம் கூட சட்டப்படியான கல்யாணத்திற்கு பிறகு இருக்கிறதுதான் எனக்கு விருப்பம்”

“ஏன்? நான் உங்களை kiss பண்ணீருவன் எண்டு பயப்பிடுறீங்களா? இவ்வளவுநாளா என்னோட பழகி என்னைப்பற்றி நீங்க தெரிஞ்சுகொண்டது இவ்வளவு தானா?”

“Sorry நதீஷா. அம்மா மேல promise நான் உங்களைப் பற்றி அப்பிடி நினைக்கேல்லை. எனக்கு என்னிலைதான் நம்பிக்கை குறைஞ்சுகொண்டு போகுது”

“இவ்வளவுநாளும் ஒழுங்கா இருந்தனீங்கதானே. பிறகென்னத்துக்குப் பயப்பிடுறீங்க?”

“முந்தி நீங்க ஆரோ. ஆனா உங்கட கழுத்தில இந்தச் சங்கிலியப் போட்டாப்பிறகு எனக்கு நீங்க என்ரை wife ஆத்தான் தெரியுறீங்க. அதாலதான் என்னைக் control பண்ணேலாமப் போயிருமோ எண்டு சாடையாப் பயம் வந்திற்று. அஞ்சுவது அஞ்சாமை பேதமை எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்”

“Don't worry ஜேந்தன். நீங்க அப்பிடிச் செய்ய மாட்டீங்க. உங்களால உங்களைக் control பண்ணேலும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. anyway இப்ப நாங்க நித்திரையைக் கொள்ளுவம். பிறகு நாளைக்கு வேலைக்கும் போகவேணும்”


2002 April 24, அதுவொரு புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அன்றைய நாள் காலை, எளிமையாக எங்கள் பதிவுத்திருமணம் நதீஷாவின் வீட்டில் நடைபெற்றது. மதிய உணவின் பின்னர். புனித தலதா மாளிகைக்குச் சென்று பௌத்த மதகுருமார்களிடம் ஆசிபெற்றுப் பின்னர் கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலில் அருச்சனை செய்துவிட்டு குறிஞ்சிக்குமரனுக்குச் சென்று மாலைமாற்றிக் கொண்டு குருந்துவத்தையில் எனது இருப்பிடத்திற்குத் திரும்பினோம். வீடு எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபனும் வேறு சில நண்பர்களும் அங்கே எமக்காகக் காத்திருந்தனர்.

இரவ 07:30 மணியளவில் Devons-இலிருந்து இரவுணவு எடுத்துவரப்பட அனைவரும் ஒன்றாய் உணவருந்தினோம். அதன் பின்னர் மற்றவர்கள் யாவரும் விடைபெற்றுச் செல்ல நானும் நதீஷாவும் தனித்து விடப்பட்டோம்.

நதீஷா குளித்துவிட்டு வர நான் குளியலறைக்குச் சென்றேன். குளித்துவிட்டுவர வீட்டின் ஒரு மூலையில் விளக்கு வைத்திருந்தாள். நான் வந்ததும் என்னையும் அழைத்துச் சென்று அருகே நிற்கவைத்துவிட்டு விளக்கேற்றி வணங்கிவிட்டு என் காலில் விழப் போனவளைப் பதற்றத்துடன் தடுத்தேன்.

“இதென்ன நதீஷா? இதென்ன பழக்கம்?”

“ஏன்? இதில என்ன தப்பு?”

“என்ரை காலில விழுகிறீங்க? அப்பிடிச் செய்யாதீங்க சரியா?”

“உங்களுக்குப் பிடிக்கேல்லையெண்டா நான் இனிச் செய்யேல்ல. ஆனா எங்கட வழக்கப்படி நாங்க நல்லநாள் விஷேஷ நாள்களில பெரியாக்களின்ரை காலில விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கிறனாங்க”

“தெரியும். நானும் சிங்கள ஆக்கள் கனபேரை அப்பிடிச் செய்யேக்க பார்த்திருக்கிறன். ஆனா நாங்க ரெண்டு பேரும் சமம். எங்களில ஒராள் பெரிசு இன்னொராள் சின்னனெண்டு இல்லை”

“OK. தங்கள் சித்தம் என் பாக்கியம்” சிரி்த்தாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

“room அங்கை ready பண்ணி வைச்சிருக்கு”

அறைக்குள் நுழைந்தோம்.

இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
.........

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன்துளி சிந்தும் பைங்கிளி


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51

Friday, April 6, 2012

வேரென நீயிருந்தாய்...(51)

“சரி, இடம் வந்திற்றுது. இறங்குங்கோ!”

விழித்துப் பார்த்தேன். van சாட்டிக்கடற்கரையை அடைந்து விட்டிருந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபத்தினுள் நுழைந்தோம். அதை ஒழுங்குபடுத்தி பிண்டங்கள் செய்து ஆவாகனம் பண்ணிப் படைத்து திருப்பொற்சுண்ணம் படித்து, கொஞ்சமாய் வெம்பி, வெளித்தெரியாமல் அழுது முடித்து, எள்ளும் நீரும் இறைக்க நதீஷாவை அழைத்துப் பின் அனைத்தையும் எடுத்துச சென்று கடலினுள் கரைத்து அப்படியே மும்முறை மூழ்கி எழுந்து பின் ஆசுவாசமாக நீந்திவிட்டு வெளியே வந்தேன்.தொண்ணூறுகளில் அப்பாவுடன் நீந்தியதற்குப் பிறகு இன்றுதான் சாட்டிக்கடலில் நீந்தியிருக்கின்றேன். நதீஷாவும் கடலினில் குளித்துவிட்டு உடைமாற்றி வந்ததும் மீண்டும் van- இல் கிளம்பினோம்.குருக்களுக்கு வேறொரு அந்திரெட்டியும் இருந்ததால் அவர் எங்களுடன் வரவில்லை.

“நதீஷா! இந்த இடம்தான் சாட்டி வெள்ளைக்கடற்கரை எண்டுறது. பாருங்க கடல் நிலம் எவ்வளவு clear ஆத் தெரியுதெண்டு. இதில கடலலையும் பெரிசா வாறேல்லை. நிலமும் நல்ல clear-ஆ இருக்கிறதால எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் குளிக்க வாறவை”

“ஓ! இதென்ன முன்னுக்கு? Mosque-ஆ? அப்ப இஞ்சை முஸ்லீம்ஸ்ம் இருக்கினமா?”

“ஓம் இது பள்ளிவாசல்தான். 90 க்கு முந்தி இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் இருந்தவை. பிறகு இயக்கம் முஸ்லீங்கள் எல்லாரையும் வெளியேறச் சொல்லேக்குள்ள அவையும் வெளியேறீற்றினம்.”

“அப்பிடி முஸ்லீம்ஸ்ஸை வெளியேற்றினது சரியா?”

“எப்பிடிச் சரியெண்டு சொல்லேலும்?”

“அப்பையேன் அப்பிடிச் செய்தவை?”

“அப்பிடிச் செய்தது பிழைதான். கிழக்கில சில முஸ்லீம் குழுக்கள் தமிழரைக் கொலை செய்தீச்சினம். பதிலுக்கு இயக்கமும் அங்கையிருக்கிற முஸ்லீம்களைக் கொலை செய்தீச்சினம். பழிக்குப் பழியெண்டு அது அங்கை கிழக்கில தொடரேக்குள்ள, இஞ்சையும் கொஞ்ச முஸ்லீம்ஸ் தமிழருக்கு எதிரா இயங்குகினம் எண்டு கேள்விப்பட்டு ஓட்டுமொத்த முஸ்லீம்களையும் கலைச்சுப் போட்டினம். ஒரு இனத்தில இருக்கிற கொஞ்சப்பேர் செய்யிற பிழைக்காக அந்த இனத்தையே கலைச்சது பிழைதான். அந்த மக்கள் என்ன பாவம் செய்தீச்சினம்? ஒரே நாளில தங்கட இடத்தைவிட்டு எங்கபோறது எண்டே தெரியாம வெளிக்கிட்டுப் போகேக்க அவைக்கு எப்பிடி இருந்திருக்கும்? பாருங்க அவை 1990 October 30 ஆம் திகதி ஒட்டுமொத்தமா தங்கட இடத்தை விட்டுப் போச்சினம். அதுக்குப் பிறகு சரியா அஞ்சு வருசம் கழிச்சு யாழ்ப்பாணம் வலிகாமத்தில இருந்த அத்தனை தமிழாக்களும் 1995 October 30 இல தங்கட இடங்களை விட்டு வெளியேறீச்சினம். தமிழரின்ரை நியாயமான இந்தப் போராட்டம் பயங்கரவாதமா வெளியுலகுக்குக் காட்டுப்படுறதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமா அமைஞ்சிற்றுது.”

“ஓ! அப்ப வேறையென்னென்ன பிழை விட்டவை?”

“ஹலோ ஹலோ, சரி பிழை சொல்லுறதுக்கு எனக்கென்ன தகுதி இருக்கு? எனக்குச் சரியெண்டு படுகிறது இன்னொராளுக்குப் பிழையாத் தெரியும். அவருக்குச் சரியெண்டு தெரியிறது எனக்குப் பிழையாத் தெரியும். சரிபிழையெல்லாம் எங்கட எண்ணத்தைப் பொறுத்தது. இண்டைக்குச் சரியெண்டு தெரியிறதே சிலவேளையில நாளைக்குப் பிழையெண்டு தெரியும்.”

“விளங்குது. ஆனா வேறை என்னத்தை அவை செய்யாம விட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“நீங்க சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லேக்குள்ள தான் வாறீங்க”

“உங்களுக்கு நான் என்ன கேக்கிறன் எண்டு விளங்குது தானே? அப்ப நேரேயே சொல்லுங்கவன்”

“ரஜீவ் காந்தியைக் கொலை செய்ததால அவைய பயங்கரவாதிகளெண்டு ஈசியா வெளிநாடுகளுக்குப் பிரச்சாரம் செய்யக்குடியதாயிருந்துது. அதோட இந்தியாவும் இந்தப் போராட்டத்தை முழுசா எதிர்க்கத் தொடங்கீற்றுது”

“ஏன் முந்தியே இந்தியா இயக்கத்துக்கு எதிரா சண்டை பிடிச்சதுதானே”

“இந்தியா செய்தது சரியெண்டு யாருமே சொல்லேலாது. அதுவும் அமைதிப்படையெண்டு சொல்லி வந்திற்று எத்தினை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை அநியாயமாக் கொன்றது?. அது செய்தது முழுக்க முழுக்க அராஜகமும் அநியாயமும் தான். அதுக்குப் பழிக்குப்பழியாத் தான் ரஜீவைக் கொன்றிருப்பினம். ஆனா இந்தப் போராட்டம் என்னத்துக்காகத் தொடங்கப்பட்டது? அதை அடையிற வழியைத்தான் அவை யோசிச்சிருக்கவேணும். அதைவிட்டிட்டுப் பழிக்குப்பழி வாங்கிறதால என்ன பிரயோசனம்? வன்மம் தான் கூடிக்கொண்டு போகும். அப்பிடிப் பழிக்குப்பழி வாங்க வெளிக்கிட்டதுதான் நிறைய நாடுகள அவையைப் பயங்கரவாத இயக்கம் எண்டு சொல்லித் தடைசெய்யக் காரணமாப் போய்ற்றுது.”

“அப்ப ரஜீவை் காந்தியைக் கொலைசெய்திருக்காட்டி இந்தியா அவைக்கு help பண்ணியிருக்குமா?”

“கடைசி மட்டும் இந்திய அரசு உதவி செய்திருக்காது. அது இலங்கையில தமிழருக்கெண்டு ஒருநாடு வாறதுக்கு விடாது. அப்பிடி வந்தா தமிழ்நாட்டிலையும் பிரச்சினை வருமெண்டு அது பயப்பிடுது. ஆனா ரஜீவ்காந்தியைக் கொல்லாம விட்டிருந்தா தமிழ்நாட்டில எதிர்ப்பு வந்திருக்காது. அவையின்ரை support இருந்திருக்கும்”

“இப்பிடி இந்தியாவின்ரை எதிர்ப்பிருந்தும் அவை இந்தளவுக்கு வென்றிருக்கினம்தானே. பிறகென்னத்துக்கு இந்தியாவுக்குப் பயப்பிடவேணும்”

“வென்றிருக்கினம்தான். ஆனா ஆனையிறவைப்பிடிச்சவை ஏன் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கேல்லை. அப்ப சாவகச்சேரி, தனங்கிளப்பு எண்டு செம்மணிக்கு கி்ட்ட வரைக்கும் இடையால வந்து பிடிச்சுப் போட்டு ஏன் விட்டிட்டுப் போனவை?”

”ஏன்?”

“ஆமியை மீட்டுக் கொண்டு போறம் எண்ட சாட்டில இந்தியா ஆமி யாழப்பாணத்துக்கு வர ரெடியாகிற்றுது. அவையை வரவிட்டா பிறகு அவையைத் திரும்பிப் போகச் செய்யேலாது. அதோட ரஜீவ் காந்தியின்ரை கொலையைச் சாட்டாவைச்சு அலுப்பெடுக்கத் தொடங்கீருவாங்கள். அதாலைதான் யாழ்ப்பாணத்தைப் பிடிக்காம விட்டிருப்பினமெண்டு நினைக்கிறன்.”

“மச்சான் டேய்! முன்னால செக்பொயின்ற் வருகுது. கொஞ்சம் அமத்தி வாசிச்சுக் கொண்டு வாறீங்களா?”
உதயனின் குரலுக்கு அமைதியானோம்.

“ஜெயந்தன் டேய்! இப்ப பதிணொண்டரையாகுது. பன்னிரெண்டரைக்கு திண்ணைவேலி முத்துத்தம்பிப் பள்ளிக்கூடத்தில அம்மாவின்ரை பேரில மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒழுங்குபடுத்தியிருக்கு. நாங்க இப்ப நேரே அங்கபோனமெண்டாச் சரிதானே,”

“ஓமடா”

“அப்ப இவா என்ன மாதிரி? வழியில இறக்கிவிடவேணுமோ? இல்லாட்டி”

“இல்லையில்ல இவாவும் அங்க வரட்டும்”

“சரி!. அப்ப அண்ணே நீங்க van-ஐ நேர திண்ணைவேலிக்கு விடுங்கோ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50