Thursday, November 25, 2010

வேரென நீயிருந்தாய்...(20)

முதல்நாள் practical session ஆதலால் விரைவிலேயே முடித்து விட்டிருந்தோம்.

“How is Jaffna?” இதுவரை நேரமும் அமைதியாயிருந்தவள் திடீரென வினவினாள்.

“It's OK. as usual”

“But we are not usual”

அவள் நோர்மலாக இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் அதைப்பற்றி அவளிடம் கேட்பதற்கான தயக்கத்தில் இருந்த அமைதியைக் கலைத்து,

“Why? what happenned?” -வினவினேன்.

“நீங்கட ஆக்க தாண்”

“what?”
-வாயிலிருந்து வார்த்தைகள் வெளியேறிய பின்னர்தான் உறைத்தது அவள் ஆங்கிலமும் சிங்களமும் இல்லாதவொரு மொழியில் கதைத்தது.

“தெமிலிலதாண் சொல்றது. விலங்கேல்ல?”

இப்ப இவள் என்னதான் சொல்லவாறாள்? எனக்கு மண்டை காயத்தொடங்கியது.

“Sorry, I couldn't understand”

“நீங்கலுக்கெல்லாம் விலங்காது. நாங்க தெமில் கதைக்கிற. நீங்க இங்கிரிசு கத்தாகரணவா. சொறிசொறி இங்கிரிசு கதைக்கிற”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?” எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே கேட்டேன்.

“நான் வாற இல்ல. போறது.”

இவளுக்கேதும் விசர்பிடித்து விட்டதோ? மனதுக்குள் சந்தேகம் எழுந்தது.

“I'm really sorry. I couldn't understand what you are talking. I don't like to talk anymore.”
சற்றுக் காட்டமாகவே கூறினேன்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வெளியே குதித்தோடுவதற்குத் தயாராய் இருப்பது தெரிந்தது. பார்க்கப் பாவமாய்த் தெரிந்தாலும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது அவளுடன் கதைத்தால் எனக்கும் விசர் பிடித்துவிடும் போல் இருந்தது. ஆயினும் அடிமனதினுள்ளே அவள்மேல் அனுதாபமும் உண்டாயிற்று. பெண்ணென்றால் பேயுமிரங்குமாமே.

“Hey Natheesha! See, if you didn't tell the things clearly, then what can I do?. Honestly I couldn't understand your Tamil. Please tell me it in English. Then only I can help you.”

அவள் நக்கலாய்ச் சிரிப்பதாய்ப் பட்டது.

“You can't help us. Not only you, even Prabhakaran comes, he can't do anything.”

அதிர்ந்தேன். நான் என்னவோ கதைத்துக் கொண்டிருக்கும் போது இவள் என்னவோ கதைக்கிறாளே.

“What do you mean by?”

“I meant even he can't give the live for the people he killed.”

“What?”

“I told it in English. Did you Understand atleast that?”

அவள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுத் தெரிந்தாள். எனக்குள் பயம் உருவாகத் தொடங்கியிருந்தது. ஒரு பெண், அதுவும் சிங்களத்தி, அதிலும் அவர்களது இடத்தில் வைத்து என்னிடம் நாட்டில் நடக்கின்ற சண்டையை பற்றி உணர்ச்சிவசப்பட்டு விவாதித்துக் கொண்டிருப்பதை வேறு யாரேனும் சிங்களப் பெடியங்கள் பார்த்தால், மனதுக்குள் நான் கம்பிகளை எண்ணத் தொடங்கியிருந்தேன்.

“Natheesha! please...”
குரலைத் தாழ்த்திக் கெஞ்சும் என்னைப் பார்க்க எனக்கே கேவலமாய் இருந்தது. என்ன இழவுக்கு இவள் எனக்கு குறூப்மேற்றாக வந்து சேர்ந்தாளோ? மனது அங்கலாய்த்தது. இந்த வருஷம் எப்பிடித்தான் practical எல்லாம் போகப் போகுதோ? ஏக்கமாய் வந்தது. அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிற ஆம்பிளைகளும் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுற பொம்பிளைகளும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது என்கின்ற சூப்பர்ஸ்டாரின் பன்ச் டயலாக் ஞாபகத்தில் வந்து சென்றது.

அவளைப் பார்த்தேன்! இன்னமும் உணர்ச்சிகள் அடங்காதவளாகவே தெரிந்தாள். உதடுகள் துடிப்பது தெரிந்தது. கோபத்தில் முகம் சிவந்திருப்பது அவளது அழகைக் குறைப்பதாய்ப்பட்டது. காடு பத்தி எரியேக்க கரடி காவோலை இழுத்திச்சாம். என் இருப்பே கேள்விக்குறியாக ஆகிக் கொண்டிருக்கையில் அவள் அழகைப்பற்றி எழுந்த சிந்தனையை இன்னொரு மனம் கண்டித்தது. ஆழ்ந்து உற்றுக் கவனித்தால் சிந்தனைகள் யாவும் ஒரு புள்ளியிலிருந்து எழுவதாய்த் தெரியவில்லை. அவை பல்வேறு இடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறு எண்ணக்குமிழ்களாய் முகிழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவகையில் அவைகூட நீர்க்குமிழிகள் போல்தான் சில எண்ணக்குமிழ்கள் சிலநொடிகள் கடந்தும் தொடர்ந்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. சில குமிழ்கள் உருவாக ஆரம்பிக்கையிலேயே காணாமல் போய்விடுகின்றன. சில குமிழ்கள் நொடிப்பொழுதுகளில் உடைந்து விடுகின்றன.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னர் நானிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. எந்தப்பெண்ணையும் ஏறெடுத்தும் பாராமல் நானுண்டு என்பாடுண்டு என்றிருந்தவன் இன்றைக்கு என்னவென்றே தெரியாதவொரு காரணத்திற்காய் அவதிப்பொழுதில் மண்டியிடும் நிலையில். என்றைக்கு இவளை முதன்முறையாய்ப் பார்த்தேனோ அன்றைக்கே பட்டினத்தாரும் கண்ணதாசனும் என்னைக் கைகழுவி விட்டிருந்தனர். பெண்கள் என்றாலே எப்போதும் சண்டைதானா? எப்போதோ படித்த பழைய பாடல் விவேக சிந்தமணியென நினைக்கிறேன், நினைவினில் வந்தது.

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே.

அவள் மேல் வைத்திருந்த மரியாதை மடமடவென சரியத் தொடங்கியது. அவளை உறுத்துப்பார்த்தவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.

“Jeyanthan! I'm sorry, really really sorry!, I was so upset for last few weeks. That's what I behaved like this. I'm extremely sorry.”

மனதிற்குள் ஏதோ இளகியது

“It's OK. Leave it."

“Thanks Jeyanthan! You know one of my uncle and my syster-in-laws brother have been killed recently in Kilinochci. My sister-in-law is so upset. Nobody can console her. Now she hates all Tamils. Yesterday she scolded me too”

“mmm.... Now I can understand your feelings! Yah! her feeling is accceptable”

“For what the hell the LTTE is fighting for?”

இவளுக்கு எப்படிப் புரியவைப்பது?

“You see! It's all because of LTTE”
என்ன சொல்லி இவளுக்கு விளங்கப்படுத்துவது. சொன்னாலும் இவளால் விளங்கிக்கொள்ளத்தான் முடியுமா? என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டு பொலிஸில் மாட்டிவிட்டு விடுவாளோ? சந்தேகங்கள் மனதைக் குடைந்தன.

“Natheesha! I guess as per your current situation, it's difficult to you to understand the things. at any cost we can't change the things which have happenned already. I hope you know the story about the mother of the dead boy and the lord Budhdha. if you want, we can talk about it after some times?”

“Of course! Thank you. Thank you so much. Now I feel so comportable. Definetly we will talk about it soon.”

நீண்ட நேரமாக நாம் விவாதித்தக்கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து அவதானித்த போதனாசிரியர் எங்களை நோக்கி வருவது தெரிந்தது.

“if you have you finished the things, you can submit your reports and leave the lab now”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19

4 comments:

  1. சிங்களவர் பற்றிய எண்ணம் மொரட்டுவையில் படித்தவர்களுக்கும் பேராதனையில் படித்தவர்களுக்கும் இடையில் பாரிய அளவில் வேறுபட்டு இருப்பதை நான் பலருடன் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். இந்த எளுத்தாளரும் அதற்க்கு விதிவிலக்கல்ல. --- பிற்-குறிப்பு: பேராதனையில் பயிலும் சிங்களவர் பெரும்பாலும் கண்டியில் இருந்தும், மொரட்டுவை மாணவர் கரையோரத்தில் இருந்தும் வருகின்றனர்.

    முரளி, இங்கிலாந்து

    ReplyDelete
  2. //ஆழ்ந்து உற்றுக் கவனித்தால் சிந்தனைகள் யாவும் ஒரு புள்ளியிலிருந்து எழுவதாய்த் தெரியவில்லை. அவை பல்வேறு இடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறு எண்ணக்குமிழ்களாய் முகிழ்ந்து கொண்டிருக்கின்றன. //

    நீங்கள் சொல்வது உடற்கூறியலின் படி சரியாக இருக்கலாம். மூளையின் வெவ்வேறான அறைகளிலிருந்து எண்ணங்கள் உற்பத்தியாகின்றன.
    ஆனால் எண்ணங்கள் உருவாக காரணமாக இருப்பது???
    அதற்கு வடிவம் இல்லை. எல்லா இடமும் பரந்தும் இருக்கின்றது. ஒரு புள்ளியிலும் அடக்கலாம்!
    அதனால்தான் ஒரு புள்ளியில் தோன்றுகிறது என்பார்களோ!

    ReplyDelete
  3. அலுப்பு தட்டுகிறது அன்பரே....!!! உம்மில் கொண்ட அன்பால் தொடர்ந்து வாசிக்கிறேன்... கொஞ்சம் வாசகர் போலவும் இருந்து பார்த்தால் எனது பக்க நியாயம், நியான் விளக்காகும் உமக்கு

    ReplyDelete
  4. முரளி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிங்களவர் பற்றிய எண்ணம் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றதென்பதை விட மனதுக்கு மனம் வேறுபடுகின்றது.. நான் படித்ததும் மொறட்டுவவில்தான்.. சிங்களவர்கள் என்னுடன் நண்பர்களாகத்தான் பழகினார்கள். எங்களுக்கிடையில் அரசியலால் எவ்வித தாக்கமும் வந்ததில்லை.. இவ்வாறு கூறுவதால் சிலவேளைகளில் நான் தமிழினத்துரோகியாகக் கருதப்படலாம்.. அதற்காக என்னால் பொய் கூறமுடியாது..

    -- மாதவன்

    ReplyDelete