Tuesday, June 9, 2009

தினந்தோறும் மனதோடு தினவெடுக்கும் நினைவுகள்.

நேற்றைய நினைவிலும்
நாளையின் கனவிலும்
இதோ இந்தக் கணம்
கரைந்து கொண்டிருக்கிறது.

மரணங்கள் பற்றிய
பிரக்ஞையின்றியே
பிரேதங்களின் பின்னால்
பவனி வருகைகள்.

இத்தனை நடந்தபின்பும்,
நிலவுகூட வளர்ந்தும்தேய்ந்தும்...
காற்றுக்கூட வீசாமலில்லை
கடல்கூட மூசாமலில்லை

எவன் எக்கேடுகெட்டால்
எனக்கென்ன என்றவாறே
சுட்டெரித்துக் கொண்டு
சூரியனும் அஸ்தமித்துவிடுகிறது.

நிரந்தரமானது இக்கணமேயெனினும்
நாளையைப் பற்றிப் பேசிப்பேசியே
நாக்கலுத்துப் போகிறது. யாருக்குத் தெரியும்
நாளையப்பொழுதிற்கு நானிருப்பேனா?

8 comments:

  1. //எவன் எக்கேடுகெட்டால்
    எனக்கென்ன என்றவாறே
    சுட்டெரித்துக் கொண்டு
    சூரியனும் அஸ்தமித்துவிடுகிறது

    சூரியன் மட்டுமல்ல நாங்களும் அவ்வாறுதானே.. :(

    ReplyDelete
  2. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சுபானு

    ReplyDelete
  3. நிரந்தரமானது இக்கணமேயெனினும்
    நாளையைப் பற்றிப் பேசிப்பேசியே
    நாக்கலுத்துப் போகிறது. யாருக்குத் தெரியும்
    நாளையப்பொழுதிற்கு நானிருப்பேனா? //

    அதனால்தான் இந்தக் கணம் மட்டுமே உண்மை என்கிறார்கள்,அறிந்தோர்.

    ReplyDelete
  4. நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
    http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

    ReplyDelete
  5. நாளை நிச்சயம் நீ இருக்க மாட்டாய் ஆனால் உனது எச்சம் சும்மா எதோ ஒரு வடிவத்தில் இருந்தே தீரும்,

    ஆரூரன்

    ReplyDelete
  6. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்

    ReplyDelete
  7. வரவிற்கு நன்றி தமிழினி

    ReplyDelete
  8. வரவிற்கும் கருத்திற்கம் நன்றி ஆரூரன்
    //
    நாளை நிச்சயம் நீ இருக்க மாட்டாய் ஆனால் உனது எச்சம் சும்மா எதோ ஒரு வடிவத்தில் இருந்தே தீரும்
    //
    “உள்ளது இல்லதாகாது.” இல்லையா?

    ReplyDelete