Wednesday, June 10, 2009

எனது மரண அழைப்பிதழ்

அன்புடையீர்!

நித்தம்நித்தம் இவ்வாழ்க்கை
நித்தியமென்ற நினைவினில்
நாளிகைகளைக் கழித்தவொரு
விடுமுறைப் பொழுதினில்,
மரணதேவன் எனை
அரவணைக்கவிருப்பதை
அறிவித்துச் சென்றான்.

இன்றோ, நாளையோ,
நாளை மறுநாளோ,
இல்லை இன்னும்சில
யுகங்கள் கழித்தோ
எனக்கான மரணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டது.

அரவம் கொத்தியோ, இல்லை
கொத்துக் குண்டுகளால் சிதறுண்டோ
என் அரவம் இல்லாமல் போகலாம்.

காக்கிச்சட்டைக் கைதினாலோ, இல்லை
வெள்ளைவான் கடத்தலினாலோ
நான் காணாமல் போகப்படலாம்.

பன்றிக் காய்ச்சலிலோ, அன்றி
பறவைக் காய்ச்சலிலோ
படடென்றென்னாவி பறிக்கப்படலாம்.

யாருக்குத் தெரியும்? இல்லை
இப்படியில்லை என்றொருமுறையில்
நான் இறந்துவிட்டிருக்கலாம்.

எது எப்படியோ எனக்கான
உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு
அதிர்ஷ்டவசமாய் முன்கூட்டியே
அறிவிக்கப் பட்டிருக்கிறது.

செத்துவிடமுன் செய்துவிடவேண்டியவை
சித்தத்தில் சிந்தனையாய் சீறியெழுகிறது.
காலம் போதுமோ? ஞாலம் தாங்குமோ?

புவியெனக்கிட்ட கடைமைகளை
நிறைவாகச் செய்வேனோ? -இல்லை
செவிகேளா மனிதனாய்க்
குறைகேட்டு நிற்பேனோ?

புண்படுத்திய உள்ளங்களை
மயிலிறகாற் தொடுவேனோ?-பின்
பண்பட்ட அவர்மனதால்
மன்னிப்பைப் பெறுவேனோ?

சத்தியமாய்ச் சொல்கிறேன்,
என்ன நடக்குமென்றோ
எது நடக்குமென்றோ
நடுக்கமில்லை எனக்கு.

இறப்பின் அழைப்பினை
ஏற்றுக் கொண்டதனால்
அழைப்பு விடுக்கிறேன்
அன்புடையீரே!

எப்போதேனும் ஒருதடவையிதை
நீங்கள் வாசிக்கும் கணத்தினில்
காலனுடன் நான்
கைகுலுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.

அப்போது உங்களுக்கெல்லாம்
அழைப்பனுப்பிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை.
ஆதலினால், இத்தால் சகலமானவரும்
இவ்வழைப்பை ஏற்றுக்கொள்வீர்களாக!

26 comments:

 1. என்ன?...........suoper.......

  ReplyDelete
 2. Simply superp.

  Death notice is the must we should have.

  I am start writing mine. :-)

  Logees

  ReplyDelete
 3. மரணத்தை எண்ணி கலங்கும் வலசு,
  மரணத்தின் தன்மை சொல்வேன் கேள்ளய்யா..!!
  மானுட ஆன்மா மரணம் எய்தாது
  அது மறுபடி பிறக்கும் இப்போது உன்னை ஆட்டிப்படைக்கும் கர்வத்தை கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று ==== >ஆரூரகீதை

  ஆரூரன்

  ReplyDelete
 4. nalla irukkunga maranaththai ethir nokkum ungal thunissal

  ReplyDelete
 5. கவிதை அருமை,வலசு-வேலணை.

  ReplyDelete
 6. வணக்கம் வலசு,
  'சும்மா' இதை கவிதை என்று விட்டு விட முடியாது. எனக்கு நிச்சயமான ஒன்றுக்கு அழைப்பு விடுவதில் தப்பில்லையே...!உங்கள் கற்பனைகளோடு பொளந்து கட்டிவிட்டீர்கள்.இருந்தும் காலம் இட்ட கட்டளைகளை நிறைவேற்ற தயாராகுங்கள். உங்களோடு எல்லோரும் தோளோடு தோள் நிற்போம்....! மரணம் மனிதனை அழிக்கும். அவன் புகழையோ வீரத்தையோ கிஞ்சித்தும் அழிக்க முடியாது. மரணத்துள்ளும் அப்பாலும் வாழ்வோம்.

  ReplyDelete
 7. ஆரூர கீதை.

  ReplyDelete
 8. புதிய கோணத்தில் மரணம்,வலசு-வேலணை.

  ReplyDelete
 9. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி Asli.

  ReplyDelete
 10. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி Logees.
  உங்கள் அழைப்பினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :-)

  அட! சும்மாங்க.

  ReplyDelete
 11. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்
  //
  மானுட ஆன்மா மரணம் எய்தாது
  //
  அப்படியெனின் ஏனைய ஆன்மாக்கள் மரணமடையுமா? குழப்புறீங்களே ஐயா!

  உங்கள் கீதாபுதேசத்திற்கு நன்றி

  ReplyDelete
 12. நன்றி பாலா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

  ReplyDelete
 13. தங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்.

  ReplyDelete
 14. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி கதியால்
  //
  மரணம் மனிதனை அழிக்கும். அவன் புகழையோ வீரத்தையோ கிஞ்சித்தும் அழிக்க முடியாது. மரணத்துள்ளும் அப்பாலும் வாழ்வோம்.
  //
  எம்தமிழர் உள்ளங்களையே இல்லமாக்கி வாழ்கிறார்கள். வாழ்வார்கள்.

  ReplyDelete
 15. வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி pukalini

  ReplyDelete
 16. www.Tamilers.com

  You Are Posting Really Great Articles... Keep It Up...

  We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

  தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

  அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

  தமிழர்ஸின் சேவைகள்

  இவ்வார தமிழர்

  நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

  இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

  இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

  இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

  இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

  சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

  Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
  It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

  This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

  "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

  சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

  இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
  உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

  நன்றி
  உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
  தமிழர்ஸ்
  தமிழர்ஸ் பிளாக்

  ReplyDelete
 17. கடமையைச் செய். ஆனால் பலனை எதிர்பாராமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மரணம் வாழ்வின் முடிவல்ல.உனது வாழ்க்கை உண்மையான அர்ப்பணிப்புள்ளதெனின், வரலாறு உன் வாழ்வை மீட்டுத் தரும்.

  ReplyDelete
 18. மரண அழைப்பிதலால் உன் மரண அழைப்பிதலால் என்னை கட்டி இழுத்தாய் போதாது என்று கள்ளச் சொடுக்கில் கள்ளச் சொடுக்கில் என்னை கிண்டல் செய்து கிண்டல் செய்து என்கருத்தை முடி மறைத்தாய், கருத்து சொல்ல என நான் வருவேன் பின் உனதே சரி என விலகுவேன்......!!!!! அப்படியே Ritigaula ராகத்தில் பாடி முடிக்கவும்

  ஆரூரன்

  ReplyDelete
 19. வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி rav.
  //
  “கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே”
  இதன் அர்த்தம் சரியாகப் பரிந்து கொள்ளப்படுமிடத்து நீங்கள் மட்டுமல்ல எல்லோருமே உடன்ப்டுவார்கள்.

  எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை என்பதே வெறும் நினைவுகளால் மட்டுமே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது. இதைப்பற்றி இன்னுமொரு பதிவில்...

  ReplyDelete
 20. இறப்பின் அழைப்பினை
  ஏற்றுக் கொண்டதனால்
  அழைப்பு விடுக்கிறேன்
  அன்புடையீரே!

  // Simply superb

  ReplyDelete
 21. மீள்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்

  ReplyDelete
 22. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Prakash

  ReplyDelete
 23. புது கோணம் அருமையான கவிதை பாராட்டுகள் நண்பா

  ReplyDelete
 24. தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 25. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி raj

  ReplyDelete