நீண்டநாட்களுக்குப் பின்னர், நேற்றைய முன்னிரவு தொடரூந்து (இரயில்/MRT) பயணத்தின் போது IPod இனையும் என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். போகிற இடத்தில் பொழுது போகத் தேவைப்படலாம் என்கின்ற எண்ணத்தில் (அது தேவைப்படவில்லை என்பது வேறுவிடயம்). பொதுவாக செய்திகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பதற்காக கைபேசியினையே (Mobile Phone) பயன்படுத்துவது வழக்கம். தொடரூந்து Lavender நோக்கி நிலக்கீழ்ச் சுரங்கத்தினுள் செல்ல, வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட IPod-இனை அணிந்து(?) கொண்டேன். City Hall இல் மறு தொடரூந்திற்கு மாறுவதற்கு காத்திருக்கையில், “அமுதமழை பொழியும் முழு நிலவிலே, ஒரு அழகுச்சிலை உடல்முழுதும் நனைந்ததே...” பாடல் ஆரம்பித்தது. மிகமிக நீ...ண்ட நாட்களுக்குப்பின்னர் அந்தப்பாடல் செவிக்கினிமை தந்தது.
சின்னவயதில் சில பாடல்கள் காரணம் தெரியாமலேயே மனதில் தங்கி விடுகிறது. அர்த்தம் புரியாமலேயே அதனை அடிக்கடி முணுமுணுத்தும் கொள்கிறோம். அதனை அடிக்கடி மனம் மீண்டும் கேட்கையில் அதுவும் அதன் அர்த்தம் புரிந்து கேட்கையில் அதன் இனிமை மேலும் கூடிவிடுகிறது. வானொலியில் நான முதன்முதலாய்க் கேட்ட பாடல் எதுவென்று நினைத்துப் பார்க்கிறேன். “மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்...” என்பது தான் ஞாபகம் வருகிறது. அந்தக் காலத்தில் அனேகமாக தினமும் காலையில் ஒருதடைவையாவது இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கும் என்றே நினைக்கின்றேன்.
நேற்றைய மதியநேர உணவின்போது மின்னல் F.M. நிகழ்ச்சியினைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில், அறிவிப்பாளினி ஒரு நேயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் “புதிய பாடல்கள், முதற்தடவை கேட்கும் போது அவ்வளவு இனிமையாய் இராது என்றும் சிலமுறை கேட்ட பின்னரே அவற்றை இரசிக்கத்தோன்றும்.” என்றார். உண்மைதான்! பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான். முதல் தடவையிலேயே எமக்குப் பிடித்தமானவையாக அமைந்து விடுவதில்லை. ஆனாலும் ஒரு சில பாடல்கள் விதிவிலக்காக அமைந்து விடுவதும் உண்டு. அப்படி எனக்குப் பிடித்த இரண்டாவது பாடல்தான் விக்ரம்-இன் நடிப்பில், கந்தசாமி படத்தில் இடம்பெற்ற “எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி...”
[அப்பாடா! தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தம் வந்துவிட்டது :-). இப்போதெல்லாம் சில விடயங்களை நேரடியாகச் சொல்லாவிட்டால் நீங்கள் வேறு எதையாவது அர்த்தம் செய்து விடுவீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது முற்றுமுழுதாக தமிழ்த்திரை பற்றிய ஒரு பதிவே.]
இன்று காலை Vijay TVயில் திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் “அந்தக்காலம் Vs இந்தக்காலம்” நிகழ்ச்சியினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. Remote Control என் கையில். அத்துடன் நான் மட்டுமே நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆமாம்! சமாந்தரமாக Sun TVயில் அர்ஜூன் நடிப்பில் “ஆணை” படமும். வைகைப்புயலின் நகைச்சுவை முடிய Vijay TVயிற்கு மாற்றிய போது “லஜ்ஜாவதியே...” பாடலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இடையிடையே வருகின்ற விளங்காத (புரிந்துகொள்ள முடியாத) வசனங்களிற்கு லியோனி அவர்கள் தன் நகைச்சுவைப் பாணியில் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன், செவிமடுத்த முதற்தடவையிலேயே எனக்குப் பிடித்துவிட்ட முதலாவது பாடல்தான் இந்த “லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே...”. உண்மையைச் சொல்லப்போனால் அந்தப்பாட்டின் அனேகமான வரிகள் எனக்கு நினைவில் இப்போது இல்லை. ஆனாலும் எதனால் அந்தப்பாடல் என்னைக் கவர்ந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மலைநாட்டில், அது ஒரு மாலை மங்கி இருள் கவியும் நேரம். சிலமாத கால இடைவெளியின் பின் சொந்த ஊர் பிரிந்த பின் நீண்டகாலம் வாழ்ந்து வளர்ந்த இடத்திற்கு, வேறொரு அலுவல் நிமித்தம் சென்ற போது நண்பர்களிடம் வந்திருந்தேன். வெளியே வழமை போல் “கண்டி மழை” தூறிக்கொண்டிருந்தது. நண்பர்களில் ஒருவன் திரைப்படங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். அப்போது புதிதாய் வந்திருந்த படங்கள் பற்றி உரையாடுகையில் “4 ஸ்ருடன்ற்ஸ் ” (மலையாளத்தில் “போர் த பீப்பிள்” [for the People] என வெளியாகியிருந்த படம் தமிழில்) பற்றி சிலாகித்தான். சினிமா பற்றிய எனது அறிவு மிகமிகக் கம்மி. அவன் சொல்வதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதது போல் பாவனை செய்தாலும் உள்ளுக்குள் அவனை வியந்துகொண்டிருந்தேன். நான் அறிந்தவரை இயக்குனரிற்காகப் படம் பார்ப்பவன் அவன் மட்டுமே. பின் படம் பார்க்க ஆரம்பித்தோம். முதலில் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் போகப்போக படம் சூடுபிடித்தது. அந்த நான்கு மாணவ்ர்களும் அரசியல்வாதியின் கொடுமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் சமூகவிரோதிகளை அழிக்கவும் தமதுயிரைப் பணயம் வைத்து ஈடுபடுவதும் பின் கிளைமாக்சில் (உச்சக்கட்டம் என்பது சரியான தமிழ்ப்பதமாய் அமையுமா? தெரிந்தவர்கள் சொல்லலாமே!) இறுதி வில்லனை அழிக்கும் முயற்சியில் வெற்றி பெறாமலேயே அவர்கள் அனைவருமே உயிர்துறக்க நேர்வதும், அட ச்சே! என்று ஏற்றுக்கொள்ள மனது கஷ்டப்பட்டு சலிப்புத் தோன்றுகையில்..... அடுத்து இயல்பாகவே இடம்பெறும் நிகழ்வு...இயக்குனரைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நியாயமான எந்தவொரு போராட்டமும் அதன் இலக்கை அடையாமல் முடிந்துவிடுவதில்லை. போராட்டக்காரர்கள் அழிக்கப்படலாம், ஆனால் போராட்டத்திற்கான காரணி இருக்கும் வரையில் போராட்டக்காரர்களும் புதிது புதிதாய் எழுவார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக தனது படத்தினூடு பார்வையாளருக்குப் புகட்டிய அநத இயக்குனரை என்ன சொல்லிப் பாராட்டுவது? இந்தப்படம் தான் முதன்முதலாக ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனரே ஆணிவேராக அமைகிறார் என்பதை எனக்கு உணர்த்தியது.
போராட்டக்காரர்கள் அழிக்கப்படலாம், ஆனால் போராட்டத்திற்கான காரணி இருக்கும் வரையில் போராட்டக்காரர்களும் புதிது புதிதாய் எழுவார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக..........
ReplyDeletei appreciate...
"எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் வலசு, ஸாரி கந்தசாமி பாடலை சாயினி என்ற புது பாடகி துள்ளும் இசையில் பாடியிருக்கிறார் என்பது உபரி செய்தி.
ReplyDeleteநன்றி ஆரூரன் "
வரவிற்கும் தகவல்களிற்கும் நன்றி ஆரூரன்
ReplyDeleteஒரு கலந்துக்கட்டி எழுதியுள்ளீர்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்
ReplyDeleteசிங்கப்பூரில் இருக்கிறீர்கள், பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளலாம்.
ReplyDeleteமின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் govikannan at gmail.com
antha last touch
ReplyDeletemmmmmmmmmmm
rasiththen
bala
//
ReplyDeleteசிங்கப்பூரில் இருக்கிறீர்கள், பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளலாம்.
//
வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாலா.
ReplyDeleteஅமுத மழை பாட்டை றேடியோஸ்பதியில் முன்பு இட்டிருக்கிறேன்,
ReplyDeletehttp://radiospathy.blogspot.com/2007/04/blog-post_13.html
Hi Valasu....
ReplyDeleteSexy heading with stapling ending.
Keep it up.
regards,
Logi
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteஒரு கலந்துக்கட்டி எழுதியுள்ளீர்கள்..//
ஆமாம்,வலசு.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கானா பிரபா.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி Logi.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
ReplyDeleteஉங்களின் அடுத்த திரைப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்