Tuesday, July 28, 2009

நன்றி நவிலலும், பிரியாவிடையும்

யார் சொன்னது காலம்
தொடர்ச்சியானதென்று?
ஒவ்வொரு கணப்பொழுதுகளும்
ஒன்றுடனொன்று சம்பந்தமேயில்லாமல்...

ஒவ்வொரு கணப் பொழுதினையும்
தனித்தனியாகவே வெட்டியகற்றியவாறே...
வேதாளம் வீழ்த்தும் விக்கிரமாதித்தனாய்
என்பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.

என்றைக்கேனும் எனக்கானவொருநாளில்
நானுமந்த “முறைதெரியாக் கதை”யிற்கான
பதிலினை அளிக்கவேண்டியதாயிருக்கலாம்.
அன்றைக்கெந்தன் சுயமழிந்து போயிருக்கும்.

நாள்தோறும் மாறிவரும் சுயம்
நாளைகூட மறைந்து போகலாம்
அதுகூடிவரும் நன்நாளினில்
நான்கூட மறைந்து போகலாம்.

அதற்குள் என் சுயம்கரைத்தல் வேண்டும்.
நானேயகிலமாகி, அந்தவகிலமும் நானாகி
நானும் நானாகி, எல்லாமும் நானாகி
நான்கரைந்து எங்குமாதல் வேண்டும்.

அப்போது நீங்கள் நானாகியிருக்கலாம்.
நான் உங்களிலும் நிறைந்திருக்கலாம்.
யாரறிவர்? அப்போது நான் மறந்திருக்கலாம்
இல்லை நீங்களேயென்னை துறந்திருக்கலாம்.

ஆதலினாலென் அன்புக்குரியோரே!
இதுவரைகாலும் நினைவுப் பாளம்பாளமாய்
கணங்களை வெட்டிக் கட்டிவைத்திருக்கும்
காலக் குவியலுக்குளிருந்து கூறுகிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!
என்னுற்ற உறவுகளே! நயமான நட்புகளே!
எதிரியாயென்னை எண்ணிக்கொண்டோரே!
பட்டும்படாமலும் பழகிக்கொண்டோரே!

உங்களிடமெந்த வேறுபாடுகளோ - அன்றி,
கருத்துமுரண்பாடுகளோ இப்போதெனக்கில்லை.
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பிரியாவிடையினை
ஏனெனில் நாளைநான் கரை(லை/ல)ந்துபோயிருக்கலாம்

8 comments:

  1. ehisa nghOJ ekf;fhfTk; tpbayhk;. fhj;jpU. eP xd;Wk; ePnaay;y. eP epidj;jthW tpilngw ,J cd; cyfKky;y. tpil jUk;ltiu tpdhf;fis tpl. tpdhNt tpilfis NjLk;. tpil fpilah tpdh NjLjjiy Fwpf;Fk;. njhlu;e;J NjL. tpilfs; gue;jit. nghUj;jkhd tpil fpilf;Fk;tiu jhd; tpdh tpdhthFk;. tpilapy;yh tpdh Fju;f;fk;.

    ReplyDelete
  2. நாளைய பொழுத நமக்காகவும் விடியலாம். காத்திரு. நீ ஒன்றும் நீயெயல்ல. நீ நினைத்தவாறு விடைபெற இது உன் உலகமுமல்ல. விடை தரும்டவரை வினாக்களை விட. வினாவே விடைகளை தேடும். விடை கிடையா வினா தேடுததலை குறிக்கும். தொடர்ந்து தேடு். விடைகள்பரந்தவை.பொருத்தமான விடை கிடைக்கும்வரை தான் வினா வினாவாகும். விடையில்லா வினா குதர்க்கம்.





    --------------


    ராவ் சொன்னதை மொழி பெயர்த்து பார்த்தேன்

    என் கருத்தல்ல அது

    ReplyDelete
  3. வாழ்வை நீ தேடி வடக்கே போனால்
    நாங்கள் போவதெங்கே.......! நாங்கள் போவதெங்கே......!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி rav, நட்புடன் ஜமால், கதியால்

    ReplyDelete
  5. ஒர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில் ஆயிரம் குதர்க்கம் கண்டாய்,
    வினாகள் உன்னை துளைத்துவந்தாலும் விடைகளை அவிழ்ப்பதை நீ நிறுத்தவே இல்லை,
    November 2008 முதல் எழுதிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை உன்னால் 'அக்னிப் பிரவேசம்' தூரமில்லை

    முகங்களை உரித்து மனங்களை படித்து பெருங்கடல் அறிவு கொண்டாய் அஞ்ஞானி ஆரூரனையும் புரிந்து கொண்டாய்...!!!!

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரா

    ReplyDelete
  7. அப்போது நீங்கள் நானாகியிருக்கலாம்.
    நான் உங்களிலும் நிறைந்திருக்கலாம்.
    யாரறிவர்? அப்போது நான் மறந்திருக்கலாம்
    இல்லை நீங்களேயென்னை துறந்திருக்கலாம்.//

    ஆஹா.இணையத்தில் இத்தனை ஆழமான கவிதையைப் படித்து எத்த்னை நாட்கள் ஆயிற்று? மீண்டும் படிக்க இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியவில்லை.

    மனமார்ந்த வாழ்த்துகள்,வலசு.

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்

    ReplyDelete