Saturday, August 1, 2009

தொடர் வினா

நிலைத்தலுக்கும்
கொண்ட நிலையைக்
கலைத்தலுக்குமிடையில்
வாழக்கை வழுவுகிறது.

ஒற்றை வாக்கியம்கூட, ஒருவர்
நிலையைக் கலைத்துப்போடலாம்.
தாசிகூறிய மந்திர வார்த்தை
நகுலனை ராமதாசராக்கிற்றே!

நிலைத்தல் எப்போதுமே
நிலையற்றதாயிருப்பினும்
அந்த நிலைமாறலில்கூடவொரு
நிலைத்தன்மை இருக்கலாம்.

கலைத்தல்கூட, கைகூடிவரலாம்
அப்போதேயெம் மாயச் சுயம்
தொலைத்துத் தெளிவுகாணும்
வல்லமை கொளல் வேண்டும்.

நிலைப்பேனா? இல்லையின்னும்
அலைவேனா? கொண்ட சுயம்
கலைப்பேனா? மீண்டு, நான்
பிழைப்பேனா? தொடரும் வினா.

6 comments:

  1. நல்லாயிருக்கு நண்பா

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பனையூரான், ஆ.ஞானசேகரன், ஷண்முகப்ரியன்.

    ReplyDelete
  3. சிம்ம ராசியில் அமர்ந்திருந்த சனி பகவான் தயவு தாட்சண்யம், கனிவு மற்றும் கலகலப்பான பேச்சுக்கு சொந்தக்காரரான புதனின் வீடான கன்னியில் அமர்கிறார். இதனால் நாட்டில் நல்லதே நடக்கும். மக்கள் அதிகம் யோசிப்பர்.


    ஆகவே வலசுவும் அதிகம் யோசித்து தனது நிலைத்தலை பற்றி எல்லா Possibilities ஆராய்ந்து எம் போன்ற இணைத்தள வாசகரிடையே ஒரு நிலையாமையை பெற்று விட்டார்

    நன்றி ஆரூரன்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சனிபகவானே!
    oops! நன்றி ஆரூரா!

    ReplyDelete