Saturday, July 18, 2009

சிங்கப்பூர் பதிவர் மாநாடும்.....


18-07-2009 இல் நடைபெற்ற சிங்கப்பூர் பதிவர் மாநாட்டிற்கு வருமாறு பதிவர் அறிவிலி அழைப்பு விடு்த்திருந்தார் (ஆள முன்னப் பின்னப் பார்த்ததில்லை பேசினதில்ல. பாத்திருந்தா மட்டும் என்ன பண்ணுவ என்று கேட்கக்கூடாது). கடந்த வெள்ளிக்கிழமையன்று (சிங்கப்பூர் வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த) பதிவர் கதியால் (கிடுகுவேலி, இவரின் முட்கம்பி முகாமுக்குள் வாழும் நண்பா..! இனை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்) அழைப்பினை ஏற்படுத்தி பதிவர் மாநாட்டிற்குச் செல்வோமா என்று கேட்டிருந்தார். பின்னர் சில காரணங்களால் எங்கள் இருவராலுமே பங்கேற்க முடியவில்லை (தப்பிட்டீங்கப்பா மாநாட்டுக்காரர்களே!). எனவே அறிவிலி அவர்களால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தரப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். அவர் ரொம்ப busy போல. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால்தான் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின் சில நிமிடங்களிலேயே அவரின் இலக்கத்திலிருந்து அழைப்புவர, வேறொரு நண்பனுடன் தொடர்பில் இருந்ததால், அவரது அழைப்பை நான் துண்டிக்க வேண்டியதாயிற்று. பின் மீண்டும் அவருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். முதன்முறையாய், அறிமுகமே இல்லாதவருடன், என்ன பேசுவதென்ற தடுமாற்றம் (இது வள்ளுவர் வார்த்தையில், எண்ணித் துணியாமல், துணிந்தபின் எண்ணிய இழுக்கு)

நான் : ஹலோ!

அறிவிலி : ஹலோ!

நான் : ஹலோ நான்... கதைக்கிறன்.

அறிவிலி: #@!##@!#

(எனது தமிழ் அவருக்கு விளங்கவில்லை sorry புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

அறிவிலி: I received a missed call from this number. That's why I called you back.

நான் : ok ok. அறிவிலியோட பேச முடியுமா? என்னையும் பதிவர் மாநாட்டிற்கு வரச்சொல்லியிருந்தீங்க. என்னால வரமுடியல. அதுதான் உங்களுக்குக் கோல் பண்ணுறன்.

அறிவிலி : ஆ! நான் ரா..ஷ் தான் பேசறேன் நீங்க வலசு-வேலணை தானே. பரவால்லீங்க அடுத்த meeting-இற்கு வந்திடுங்க.

நான் : சரிங்க! அப்புறம் meeting எல்லாம் எப்பிடிப் போய்க்கிட்டிருக்கு?

ரா..ஷ் : ம்ம்ம். ஆரம்பிச்சிட்டோங்க. 15 பேர்வரைல இதுவரைக்கும் வந்திருக்காங்க. உங்களுக்கு அப்புறமா update பண்றேங்க.

நான் : சரிங்க. அப்ப அடுத்தவாட்டி சந்திப்பமுங்க. meeting-க enjoy பண்ணுங்க.

இணைப்பினைத் துண்டித்தோம்.

பதிவர் மாநாட்டில் என்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலுடன் அறிவிலியின் வலைத்தளத்திற்கு சற்று முன்னர் சென்றேன் (இப்போதெல்லாம் இணையத்தில் உலாவ என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை). இறுதியாக ஆடி 17 அன்றே பதிவிட்டிருக்கிறார். பதிவின் தலைப்பு சுவாரஸ்யமான அதிர்ச்சி. என்னவென்று பார்த்தால் அட! எனக்கும் அது சுவாரஸ்யமான அதிர்ச்சி. அவர் பட்டியலிட்டிருக்கும் 6 சுவாரஸ்யமான வலைப்பதிவுகளில் 'சும்மா' வும் சும்மா இடம்பிடித்திருக்கிறது. நன்றி அறிவிலி.

இப்ப இது என்னோட முறை. இந்த விளையாட்டின் நிபந்தனைகளின்படி நானும் 6 பதிவுகளைப் பட்டியலிடவேண்டும்.பட்டியலிட என்னிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கிறது. ஆனாலும் விதி ஆறுடன் மட்டுப்படுத்தச் சொல்கிறது. மேலும் சிலர் ஏற்கனவே இந்த விளையாடடில் விளையாடிவிட்டனர். எனவே நான் பட்டியலிடும் அந்த 6 வலைப்பதிவுகளும்

1) ஷண்முகப்ரியனின் 'படித்துறை'

2) கோவி.கண்ணன்-இன் 'காலம்'

3) ஆ.ஞானசேகரன்-இன் 'அம்மா அப்பா'

4) மயாதி-இன் 'கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்'

5) சுபானு-இன் 'ஊஞ்சல்'

6) தேவன் மாயம்-இன்'தமிழ்த்துளி'

என்னிடமே எனக்குப்பிடிக்காத ஒரு பழக்கம் எதையும் உடனே தொடங்கிவிடுவது, ஆனால் உரிய நேரத்திற்குள் அதைச் செய்து முடிப்பதில்லை. சிலவேளைகளில் தொடங்கியதை பின்னாட்களில் மறந்துவிடுவதும் உண்டு. அதுதான் அறிவிலி என்கின்ற பெயரில் உலாவரும் ரா..ஷ் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் “வேரென நீயிருந்தாய்...” தொடருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ச்சியாய் எழுத நினைத்திருந்த போதிலும் அப்போதிருந்த மனநிலையில் அதைத்தொடர முடியவில்லை. பின்னர் வழமைபோன்று அதை மறந்தும் விட்டிருந்தேன். ஆனால் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

14 comments:

  1. ம்ம்ம்....! என்னையும் மாட்டிவிட்டீங்கள்...! நன்றி எனது பதிவிற்கான இணைப்பை கொடுத்ததற்கு...!!

    ReplyDelete
  2. பெற்றுக் கொடுத்த உங்களுக்கும், பெற்றுக் கொண்ட சக வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  4. வருகைக்கும் கருததிற்கும் நன்றி கதியால்

    ReplyDelete
  5. மிகவும் நன்றி வலசு - வேலணை.

    நேரில் சந்திக்கலாம் என்ற ஆவலிலேயே அழைப்பு விடுத்தேன். பரவாயில்லை பிறகு சந்திப்போம்.
    சந்திப்பு பற்றிய மேலும் தகவல்களும் புகைப்ப்டங்களும் விரைவில்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா

    ReplyDelete
  7. நானும் ஆவலாயிருக்கிறேன்.
    நிச்சயம் விரைவில் சந்திப்போம் அறிவிலி

    ReplyDelete
  8. கலக்குங்க ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  9. என்ன அதிர்ச்சி... ஆகா.. நன்றிகள்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. வாழ்த்துக்களுக்கு நன்றி சுபானு. கலக்குங்க

    ReplyDelete
  11. விருதுக்கு மிக்க நன்றி வலசு !

    ReplyDelete
  12. மேலும் பலரிடமும் இந்த விருதினைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

    ReplyDelete