Friday, April 3, 2009

வேரென நீயிருந்தாய்...(1)

எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ..........விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது. கண்களை வேறு, எதுவோ மறைத்துக்கொண்டிருந்தது.

இது கனவா? இருக்க முடியாது. இந்த வலி நிஜம். காலை, ஏன் கைகளைக் கூட அசைக்க முடியாதவாறு வலி, வலி வலி....

வலியை மீறிய மனவலிமையுடன் இடது கையை ஊன்றி எழமுயல்கிறேன்.

“அண்ணே எழும்பாதீங்கோ. அப்பிடியே படுத்திருங்கோ. கால அசைக்கக்கூடாது.” ஏதோவொரு குரல் என்னை மிரட்டுகிறது.

“டொக்ரர் இந்தப் பேஷன்ருக்கு நினைவு வந்திற்றுது.” எங்கோ தொலைதூரத்தில் இருந்து கேட்பதாய் அதேகுரல்.

யாரோ அருகில் வந்து கன்னத்தைத் தட்டி “அண்ணை இப்ப எப்பிடியிருக்கு?”

யாரிது? இது, இந்தக்குரல் நதிஷா இல்லை. முதலில் அதட்டிய குரலும் இல்லை.

“நதிஷா....”

“அண்ண தயவு செய்து சத்தம் போடாதீங்கோ. மற்ற பேஷன்ற்ஸ்ஸும் முழிச்சுரிவினம்.”

அதே குரல், இம்முறை அதுவும் அதட்டியது.

“ஐயோ! வலிக்குது. தாங்கமுடியுதில்ல. ஐயோ! அம்மா.. ந.தீ..ஷா...”

“சின்னவன் இந்த பேஷன்ருக்கு ரெண்டு பனடோல் குடுங்கோ” சொல்லிவிட்டு அந்தக் குரல் நகர்ந்து சென்றது.

பனடோல் தந்தவரிடம் “அண்ணே! எனக்கு என்ன நடந்தது? என்ர மனிசி பிள்ளைகள்... என்ர மனிசி எங்கையண்ணே?”

“அண்ணே குறைவிளங்காதைங்கோ. உங்கட பேர்கூட இஞ்ச ஒருத்தருக்கும் தெரியாது. இதுக்குள்ள உங்கட சொந்தக்காரரைப் பற்றி எப்பிடியண்ணே தெரியும்? நீங்க இப்ப புதுமத்தாளன் ஆசுப்பத்திரியிலை இருக்கிறியள்.”


(வேர் விடும்)

6 comments:

  1. ஆழ்ந்த துயரத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த விதை எந்த மரமாக வளருமோ என்ற தவிப்புடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
    நீங்கள் விமர்சனங்களாய் விடும் தண்ணீரில் இம்மரமும் வேர்விட்டு வளரும்.

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  4. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சயந்தன்

    ReplyDelete
  5. gpl;Lf;F kz; Rke;j gpuhd; kPJ tpOe;j mb.Nghy xt;Nthu; capupYk; typf;fpwJ. Fw;wk; ghz;badpyh? vk; gpuhdpyh? tpil mtutu; Njlypy;.

    ReplyDelete
  6. //
    rav said...

    பிட்டுக்கு மண் சுமந்த பிரான் மீது விழுந்த அடி.போல ஒவ்வோர் உயிரிலும் வலிக்கிறது. குற்றம் பாண்டியனிலா? எம் பிரானிலா? விடை அவரவர் தேடலில்.
    //

    வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி rav

    ReplyDelete