Tuesday, March 31, 2009

காதலும் கத்தரிக்காயும்

நண்பனொருவன் தான் காதலிப்பதாகவும் அதைத் தன் காதலியிடம் கவிதை வடிவில் தெரிவிக்க விரும்புவதாகவும் எப்படி கவிதை எழுதுவதென்றும் கேட்டு நடுநிசியை அண்டும் நேரத்தில் தொ(ல்)லைபேசினான்.

அப்போது நான் இருந்த மனநிலையில், “ஆடான ஆடெல்லாம் தவிடுபுண்ணாக்கெண்டு அலையுதாம். வாத்தியார் வீட்டு நொண்டி ஆடு மட்டும்... இப்ப உனக்கெதுக்கு இந்த காதலும் கத்தரிக்காயும்?” என்றேன்.

நண்பனுக்கு விளங்கிவிட்டது நான் வெறியில் (அட நிஜமாலுமே நித்திரை வெறிங்க) இருப்பது. எனக்கு மின்மடலில் விளக்கமாய் அனுப்பவதாய்க்கூறி அழைப்பினைத் துண்டித்தான்.

பொதுவாகவே காதல் என்றவுடன் இந்தக் கத்தரிக்காயும் அதனுடன் சேர்ந்து விடுகிறதே. அப்படியானால் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றதா அல்லது அமவாசைக்கும் அப்தல்காதருக்கமான உறவு போன்றதா?

எனக்குத் தெரிந்த வரையில் பெண்கள் பருவமடைந்ததும் பச்சரிசிச் சோறும், வெள்ளைக் கத்தரிக்காய்ப் பாற்கறியும், நல்லெண்ணெய்யும், உழுத்தங்களியும் அவர்களுக்கான பிரதான உணவாக மாறி விடுகின்றது. அதைவிடுத்து கத்தரிக்காய்க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

கத்தரிக்காய் பிராணசக்தியைக் குறைக்கும் என்று சில யோகாவில் சொல்லப்படுகிறது. பாக்கியராஜ்-இன் படத்தில் சொல்லப்படும் சம்பந்தம் அறிவுபூர்வமாக தவறென்று மருத்துவ நண்பன் ஒருவன் கூறினான்.

அப்படியானால் எதற்காக காதலுடன் இந்தக் கத்தரிக்காயைச் சம்பந்தப் படுத்துகிறோம். தெரிந்தவர்கள் கூறலாமே.

9 comments:

 1. கண்டறியாத காதலும் கத்தரிக்காயும்

  ReplyDelete
 2. ரொம்ப பழைய கேள்வி!
  கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்தாகனும் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க. அர்த்தம்: ஒரு விஷயத்த (காதல) ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. இபபடி அல்லது இதனால் ஒரு சம்பந்தம் இருக்கலாம் என்பது என்னோட யூகம்.

  அன்புடன்,
  ராஜ்.

  ReplyDelete
 3. நானும் ராஜ் இனுடைய கருத்துடன் உடன்படுகிறேன்.

  ReplyDelete
 4. கா,க என்ற மோனைக்காக மட்டும் தொடர்பே இல்லாத வார்த்தைகளைக் கோர்த்து விடுகின்றனர் என்பது எனது கருத்து..

  ReplyDelete
 5. உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி rajadhi raj, kidukuveli, மற்றும் ஷண்முகப்ரியன்.

  ReplyDelete
 6. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  ReplyDelete
 7. http://blog.sajeek.com/?p=255

  இந்த இணைப்பில முந்தி முக்கியமாக கலந்துரையாடினம். ஒலி இப்ப வருதோ தெரியல்ல.. ஆனா பின்னுாட்டங்கள் சுவாரசியமா இருக்கும்

  ReplyDelete
 8. நன்றி சயந்தன். ஒலியினைக் கேட்க முடியவில்லை. பின்னூட்டங்கள் பல கருத்தக்களைத் தந்தன.

  ReplyDelete
 9. சும்மா ஒரு Rhythmic ஆக இருக்கட்டுமே என்று சொல்லியிருப்பார்கள்..

  காதலும் கத்தரிக்காயும் என்று சொல்லிப் பாருங்கள்.. நெடிலினைத் தொடர்ந்து குறில் தொடர்ந்தொலிப்பதால் அழகாவும் உச்சரிப்பதற்கு ஏதுாவாககும் இருக்கின்றது அல்லவா..
  அதுவே

  கத்தரிக்காயும் காதலும் எனறு சொல்லிப்பாருங்கள்.. கஸ்டமாக இருக்கிறதா.. அதனால்தான்..

  அப்புறம் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா என்று காதலை அனுபவரீதியாகக் கற்றவர்களுக்குத் தான் தெரியும்...

  ReplyDelete