Friday, June 8, 2012

பார்த்தீனியமும் அரசும்



பார்த்தீபன் கொல்லப்பட்டதும்
பார்த்தீனியம் பரவியதும்
பார், தீனிக்கு வழியின்றி-இப்
பாரெல்லாம் பாழ்படுமென்றதும்...

ஊரெல்லாம் களையின்றிக்
களையகற்றிக் கடந்தோம்
யாரெல்லாம் வந்திங்கு
யாதெல்லாம் செய்தார்கள்?

அரசு துறந்தவர் -அன்று
அரசடியில் அமர்ந்தார். -இன்று
அரசு கண்ட, இடமெல்லாம்
அமர்த்துகிறது அவரை அரசு!



அரசு களை.

3 comments:

  1. என்ன வேர்ல இருந்து மரத்துக்கு தாவியிருக்குரியள் ?

    ReplyDelete
  2. ////அரசு துறந்தவர் -அன்று
    அரசடியில் அமர்ந்தார். -இன்று
    அரசு கண்ட, இடமெல்லாம்
    அமர்த்துகிறது அவரை அரசு!////

    ஒரு சில வரியில் எந்தப் பெரிய ஆழத்தை உறுத்தியுள்ளீர்கள்... அருமைங்க...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete