Monday, September 27, 2010

உணர்ச்சிகள் அற்ற கவிதை


உணர்ச்சிகள் அற்றவனின்
புணர்ச்சியின் எச்சமாய்
வெற்றுத்தாளில் ஒரு
வறண்ட கவி(/)தை!

வார்த்தை ஜாலங்களோ
மாய் மாலங்களோ
அற்றவொரு வெறும்
வெற்றுக் கவி(/)தை!

தையல் பற்றியோ - கொண்ட
மையல் வற்றியோ, அன்றி
பற்றுக்கள் தொலைத்தவனின்
பரிதாபக் கவி(/)தை!

பொய்களைத் தாண்டி
மெய்களைத் தீண்டி
உவமைகள் வேண்டி
உவப்பற்ற கவி(/)தை!

கருவே காணதவொரு
கர்ப்பப்பை போன்று
உருவே கொள்ளாமலொரு
மலட்டுக் கவி(/)தை!

நாற்றுநடா வயல்போன்று
எழுதுகோல் விடும்
கீற்றுக்கள் தீண்டாத
அரூபக் கவி(/)தை!

6 comments:

  1. இப்படியே இன்னும் இழுத்துகிட்டே போகலாம் போலிருக்கே

    வார்த்தைகள் வந்து கொட்டுதே

    ReplyDelete
  2. உணர்ச்சிகள் அற்ற,வறண்ட,வெற்று,அற்ற,பற்றுக்கள் தொலைத்த,பரிதாப,உவப்பற்ற.........

    ஏன் எல்லாமே வெறுமையான வார்த்தைப் பிரயோகங்கள்.?
    உண்மை தீண்டினால் இப்படியா???
    ”ஆனந்தம்” எங்கே? ”வெறுமை” மட்டும் அல்லவா தெரிகிறது?
    மலட்டுக் கவி(/)தை,அரூபக் கவி(/)தை எதற்காக???
    பற்று அற்றவனுக்கு மலட்டுக்கவிதையா?
    உருவம் இல்லாதவனுக்கு அரூபக்கவிதையா?

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் நல்லாயிருக்கு......

    நலமா? நண்பரே

    ReplyDelete
  4. அற்புதமான வார்த்தை பிரவாகம்.
    அபாரமான திறமை.

    ReplyDelete
  5. நல்ல கற்பனை வளம்... ஆனால் ரசிக்கதான் முடியவில்லை....
    ஆனால் எனக்கு கணித கவிதை ஒன்று பிறந்தது.....!!!


    (மலட்டுக் கவி(/)தை+அரூபக் கவி(/)தை)-2*வெறுமை=கணித கவிதை

    ReplyDelete
  6. கையில ஒண்ணுமில்ல! வேணா ஒரு இ - முத்தம் தரட்டுமா?" மாப்பு......???? (ரொம்ம உணர்ச்சி வசப்பட்டுவிட்டேனா..)

    ReplyDelete