பூமிப்பெண்ணும் இந்த
ஆமைப்பெண் போல்தான்
அன்றொருநாள் சூல்கொண்டாள்
ஆயிரம் முட்டைகளின்றியொரு
அக்கினிக் குஞ்சிற்காய்
அடை காத்தாள்.
அடங்காப்பற்றினை அண்டி
அன்னியர் அயலவர்
அனைவரும் வந்தனர்.
இருபத்தொரு தலைமுறைக்கு
கருவறுத்த பரசுராமன்
பரம்பரைதானேயது!
இருபத்தொன்றுக்கு பழிதீர்ப்பதாய்
பகையுடன் சேர்ந்து பதினெட்டில்
பகடையாடியதாம்.
பாருங்கள் இப்படித்தான்...










படத்துடன் கவிதை அருமை. கருத்து வலி ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteNalla karuthu
ReplyDelete