Friday, May 28, 2010

தேடலும் தொலைத்தலும்!













ஒவ்வொரு முறையும்
எங்கேயென்றே தெரியாத
ஏதாவதொரு புள்ளியில்தான்
ஆரம்பிக்கின்றன
எனது தேடல்கள்!











நுாலின் ஒற்றைநுனி பற்றி
சிக்கெடுக்கும்
பக்குவத்துடன்தான்
ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தடவையும்.












இழையோடும் பாதையோடு
விழைந்து செல்லும்
விழிகள், விட்டுவிடும்
இடம்தான் ஈற்றில்
புரிபட்டு விடுவதில்லை.













எதிலோவெல்லாம் தொடங்கி
எங்கோவெல்லாம் சேர்ந்து
சோர்ந்து போகையில்
மறந்து விடுகின்றன
முடிவிடப் புள்ளிகள்.












அமர்க்களமாய் ஆரம்பித்தாலும்
இதோ! இப்படித்தான்!
ஈற்றில் என்னவென்றே தெரியாமல்
தொலைந்து போகின்றன
அந்தத் தேடல்கள்!

1 comment:

  1. தேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்......என்னய்யா இன்னும் தேடிக்கிட்டேதான் இருக்கிறீங்களா.....? அருமை..

    ReplyDelete