எனக்குள்ளேயே
நான் இருப்பதாய்
நெடுநாளாயிருந்தவென்
நினைப்பு கலைந்ததெனக்கு.
வேறெங்கோவெல்லாம்
என்னைக் கண்டதாய்,
கண்டவர்கள் வந்து
சொல்லக் கேட்டேன்.
வாய்வழி வந்து
செவிவழி புகுந்து,
பின்னும் நான்
அலைகின்றேனாம்.
பலரும் பார்த்துவிட்டுப்
பார்க்காமலேயே போவதைப்,
பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்.
காற்று வெளிகளில்
கால்தடம் பதி்ப்பதாய்
தூற்றவும் செய்கிறார்களாம்.
எனக்குள் நானிருந்ததான
நினைப்பெனக்கு
கலைந்ததிப்போ.
உங்களைத் தான்!
எங்கேனும் கண்டீர்களா
நானின்றி என்னை?
உண்மை, எங்களை நாங்கள் தொலைத்துவிட்டு, ஒவ்வொருவரும் வேறூ மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், நன்றாகவிருக்கின்றது.
ReplyDeleteஎனக்குள் நான் என்னைத் தேடுகிறேன் என்று புறப்பட்டு இப்போ காற்று வெளியில் தேடுகிறீர்கள். தேடல் சுகம்தான். கண்டால் சொல்கிறோம்..! நல்ல கவிதை..தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!
ReplyDeleteகவிதை அருமை வலசு.
ReplyDelete