“மச்சான் இண்டைக்கு எல்லாரும் தண்ணியடிக்கத்தான் வேணும். குடிக்க மாட்டன் எண்டிறவைக்கெல்லாம் இண்டைக்குப் பருக்கிறதுதான்.”
நிகழ்காலத்திற்கு வந்தேன்.
“மச்சான் டேய்! நீ ஊத்து. டேய் நீ இஞ்ச வந்து இவனைப்பிடி. நான் பருக்கிறன். ஒருத்தரும் இண்டைக்குத் தப்பேலாது..”
கிட்ட வந்து மடக்கினார்கள். மிண்டினேன்.
“ஜெயந்தன்! இதுதான் கடைசியா அடிக்கிறது. எங்கட friendship உனக்கு இனி வேண்டாமெண்டா விட்டிட்டுப் போ”
மற்றவர்களும் அதை ஆமோதிக்கவே என்நிலை சங்கடத்திற்குள்ளானது.
“நான் மட்டுமா அடிக்காம நிக்கிறன்? அங்க உள்ளுக்குள்ளையும் நிக்கிறாங்கள் தானே. அவங்கள் எல்லாரும் குடிச்சா நானும் குடிக்கிறன்”
“இண்டைக்கு ஒருத்தரும் தப்பேலாது. அவங்களையும் ஒவ்வொருத்தரா இழுத்துக் கொண்டு வரத்தான்போறம். இப்ப நீ அடி”
நட்புக்களை முறிக்காமல் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விளங்கியது. "If friendship is your weakest point then you are the strongest person in the world" என்கின்ற வாக்கியம் நினைவினில் வந்தது. அக்காவும் மனதினுள் வந்து போனாள். welcome party-யின் பின் குடிப்பதில்லையென்று அக்காமேல் மனதிற்குள் சத்தியம் செய்ததும் நினைவினில் வந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அக்காதான் இப்போது உயிரோடு இல்லையே. மனம் சாயத்தொடங்கியது. பருக்க வந்ததைத் தடுத்து நானே வாங்கி அருந்தினேன். மற்றவர்கள் உற்சாகப் படுத்த மீண்டும் பருகிவிட்டு அப்படியே எழுந்து நடக்க, குறிஞ்சித்தென்றல் உடலைத் தழுவி சிலீரிட வைக்க, அப்பா! என்னெவொரு சுகானுபவம்?. சொர்க்கம் தெரிந்தது. காலடியில் தரை ஆடுவதாய் பட்டது. கட்டடங்களும் ஆடத்டெதாடங்க தள்ளாட்டமாய் உணர்ந்தேன். அப்படியே மெதுவாய் நடந்து farewell party நடந்து கொண்டிருக்கும் drawing room-இன் வெளிப்புறச் சுவரருகே சென்று சுவரைப் பிடித்துக் கொண்டேன். தலை பாரமாய் இருந்தது. அப்படியே படுக்கவேண்டும் போல் இருந்தது. என்னையறியாமலேயே கால்கள் வழுவி மெதுவாய் நிலத்தில் சரிந்து விழுந்தேன்.
***
“அங்க பாரடி! ஜெயந்தனும் தண்ணியடிச்சிற்று அதிலப் படுத்துக் கிடக்கிறான்”
“ஓமடி! vomit பண்ணீற்று அதுக்கு மேலயே படுத்துக்கிடக்குது”
யாரோ பெண்கள் சிலர் உரையாடிக் கொண்டு செல்வது மயக்கத்தில் கேட்டது. எழுந்து பார்க்க முடியாதவாறு தலைவலி என்னை முடிக்கிப் போட்டது. சற்று நேரம் கழித்து இருவர் என்னை நோக்கி வருவதைக் காலடியோசையில் இருந்து அனுமானித்தாலும் எழுந்து பார்க்கச் சக்தியற்று அப்படியே கிடந்தேன்.
“ஓயா அறப் பத்த அல்லண்ட, ஆ! ஏகமத் தமாய்! ஜேந்தன் நகிடிண்ட” (நீங்க அந்தப் பக்கம் பிடியுங்க. ஆ! அப்பிடித்தான். ஜேந்தன் எழும்புங்கோ)
இது... இந்தக்குரல் நதீஷா. அவமானமாய் உணர்ந்தேன். அவள் தனது தோழியையும் அழைத்து வந்து என்னை எழுப்பிக் கொண்டு போய் ESU room இறகுள் கொண்டு சென்றாள். அங்கே இருந்த bench-இல் கிடத்திவிட்டு தன்னுடன் வந்திருந்த தோழியிடம், என்னை அக்பரில் கொண்டு சென்று விடுவதற்காய் வேறு மாணவர்களை அழைத்துவரச் சொன்னாள். சுறறுமுற்றும் பார்த்தேன் farewell party முடிந்து மாணவர்கள் கிளம்பத் தொடங்கியிருந்தார்கள். என்மேல் எனக்கே வெறுப்பாய் வந்தது. எவ்வளவு நேரமாய் வெறுந்தரையில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறேன் ஒரு பூனா மகனும் என்னைத் தூக்கிக் கொண்டு போய் அக்பரில விடேல்லை. பெரிய புடுங்கிகள் மாதிரி friendship-ஐப் பற்றிக் கதைசசு என்னை தண்ணியடிக்க வைச்சிற்று நடுறோட்டில விட்டிட்டுப் போய்ற்றாங்கள். இவங்களையெல்லாம் friends எண்டு நினைச்சு நான் தான் ஏமாந்து போய்ற்றன். தீபன் வன்னியிலயிருந்து சொந்தக்காரர் வந்திருக்கினம் எண்டு அவையைப் பார்ரக் வவுனியாவிற்குப் போயிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் இருந்திருந்தால் இந்தளவிற்கு வந்திருக்காது. உண்மையான நட்பு ஒருபோதும் தப்பான வழியில் எம்மைச் செல்ல வைக்காது. தப்பான வழிக்கு எம்மை இழுத்து விடுவது உண்மையான நட்பாக இருக்முடியாது. நான் தான் உண்மையான நட்புக்களை அடையாளம் காணத் தவறியிருக்கின்றேன்.
நதீஷாவைப் பார்த்தேன். எதுவும் நடவாதது போல் வாசலையே பார்த்தக் கொண்டிருந்தாள். இவள் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன். அதையெல்லாம் மறந்து விட்டு இப்போதும் இங்கே எனக்காய்... இவள் மட்டும் தமிழிச்சியாய் இருந்திருந்தால்? மனம் மருகியது.
“அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனிநான் தொட மாட்டேன்.”
“ஜேந்தன்! ஏன் அழுகிறீங்க? நான் உங்களை disturb பண்ணீற்றனா? அதாலதான் குடிச்சீங்களா? sorry ஜேந்தன் என்னால இனி உங்களுக்கு எந்த disturbance-உம் வராது. promise. Please இனிமேல் குடிக்காதீங்க. உங்களை மட்டும் நம்பித்தான் உங்கட அம்மா இருக்கிறா. அவாக்கு நல்ல மகனா இருங்கோ. நீங்க நிறைய கொள்கைகளோட இருக்கிறனீங்க. அதுகளையும் ஞாபகம் வைச்சிருங்கோ. திரும்பவும் சொல்லுறன். promise-ஆ நான் இனி உங்களை disturb பண்ண மாட்டன். நீங்க உங்கட அம்மாவைச் சந்தோஷமா வைச்சிருங்கோ. இதை நான் ஒரு friend-ஆகத்தான் உங்களிட்டக் கேக்கிறன். உங்களை நான் முந்தி disturb பண்ணினதுக்கு என்னை மன்னியுங்கோ. நீங்க சொன்ன மாதிரி நாங்க friends ஆகவே இருப்பம். உங்கட நல்ல குணத்துக்கு உங்களுக்கும் உங்கட அம்மாக்கும் பிடிச்ச மாதிரி நல்ல பொம்பிளை கிடைப்பா. Wedding-இற்கு எனக்கும் invitation அனுப்புங்கோ”
அவள் சொல்லச் சொல்ல எனக்குள் அவள்மேல் காதல் பெருகியது. அவளை உற்றுப் பார்த்தேன்.கண்கள் கலங்கியிருந்தன.
“உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்”
நதீஷாவின் தோழியுடன் வேறும் இரு சிங்கள மாணவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள்.
“OK. you can go with them. they will take you to your room. bye”
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35
>“ஜெயந்தன்! இதுதான் கடைசியா அடிக்கிறது. எங்கட friendship உனக்கு இனி வேண்டாமெண்டா விட்டிட்டுப் போ”
ReplyDeleteமற்றவர்களும் அதை ஆமோதிக்கவே என்நிலை சங்கடத்திற்குள்ளானது.////
எனக்கும் கிட்டத்தட்ட இப்படி நடந்தது. "என்னைக் குடிக்க கேட்டால் என்ரை friendship உங்களுக்குத் தேவையில்லை" என்று திருப்பிப் போட்டுவிட்டேன்.
நதீஷா இப்ப எங்கு என்று அறிய ஆவல்.
அழுதிட்டன் ஜெயந்தன் உங்கள் காதல் கதையை படிச்சு. தயவு செய்து கதையை சந்தோசமாக முடிக்கவும்
ReplyDeleteமச்சி
ReplyDeleteஅண்டைக்கு உன்னை விட்டிட்டு போனதை மறக்காமல் ஞாபகம் வச்சு 10 வருசத்துக்கு பிறகு திட்டியதற்கு நன்றி
- அன்று உன்னுடன் குடித்த நண்பன்
firewall party இல குடித்ததும் குடிக்க வைத்தது ஞாபகத்துக்கு வந்து போனது. எல்லாமே கம்பஸ் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான்.
ReplyDeleteகுடிச்சவங்கள் குடுக்கிற தொல்லையை விட, குடிச்சமாதிரி நடிக்கிறவன்களின் தொல்லைதான் கூட.